Advertisment

iQOO Neo 7 முதல் Redmi K50i வரை: ரூ. 30,000 பட்ஜெட்டில் சிறந்த கேமிங் போன்கள் இங்கே!

ரூ. 30,000 பட்ஜெட்டில் சிறந்த கேமிங் போன்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

author-image
sangavi ramasamy
New Update
iQOO Neo 7 முதல் Redmi K50i வரை: ரூ. 30,000 பட்ஜெட்டில் சிறந்த கேமிங் போன்கள் இங்கே!

ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாததாக மாறிவிட்டன. ஷாப்பிங், ரீசார்ஜ், இ.பி கட்டணம், இ.எம்.ஐ, வாடகை என அனைத்தும் போன் மூலம் செய்யப்படுகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று இளைஞர்களை கவரும் கேமிங் வசதியாகும். Snapdragon 870-இயங்கும் GT Neo 3T முதல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO Neo 7 வரை பட்ஜெட் விலையில் சிறந்த கேமிங் போன்களாக உள்ளன. அல்ட்ரா கிராபிக்ஸ், FPS போன்ற பல்வேறு வசதிகள் விளையாட்டை மேம்படுத்துகின்றன.

Advertisment

iQOO நியோ 7

மிகவும் பிரபலமான iQOO Neo 6-க்கு அடுத்தபடியாக, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO Neo 7 ஆனது MediaTek

Dimensity 8200 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது Qualcomm இன் Snapdragon 888 Plus உடன் ஒப்பிடும்போது சிறப்பாகச் செயல்படுகிறது.

ஃபோன் பின்புறக் கவர் பிளாஸ்டிக்கால் ஆனது. 1080 x 2400 ரிசெல்யூசன் கொண்ட 6.78-இன்ச் 120Hz HDR10+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது FuntouchOS 13 இல் இயங்கும் ஆண்ட்ராய்டு 13 அவுட் ஆஃப் பாக்ஸ் மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது. இவை அனைத்தும் 120W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

publive-image

நியோ 7 64எம்பி முதன்மை கேமரா கொண்டுள்ளது. அதனுடன் 2எம்பி டெப்த் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் உள்ளது. iQOO நியோ 7 ஆனது ரூ. 29,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் வெளிவந்த முதல் சிறந்த கேமிங் போன்களில் ஒன்றாக இது உள்ளது.

Redmi K50i

Redmi K50i 2022-ம் ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ. 30,000 கீழான போன் ரிவ்யூ அடிப்படையில் Redmi K50i சிறந்த கேமிங் போன் ஆகும். MediaTek Dimensity 8100 சிப்செட்டைக் கொண்டுள்ளது, இது OnePlus 10R மூலம் இயக்குகிறது.

publive-image

MIUI 13-இல் இயங்குகிறது. 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது. இது கேம் மற்றும் ஆப் லோடிங் நேரங்களைக் குறைக்க உதவும். 64MP முதன்மை சென்சார், 8MP அல்ட்ராவைடு மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொண்டுள்ளது. இந்த போனில் கேமிங் மிக இலகுவாக விளையாட முடிகிறது. Redmi K50i ரூ. 24,698 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Poco F4

2022-ம் ஆண்டு வெளிவந்த போன்களில் Poco F4 சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும். ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மற்றும் 120Hz FHD+ AMOLED டிஸ்பிளே கொண்டு இயங்குகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை இன்டர்னஸ் ஸ்டோரேஜ் வழங்குகிறது. கேமிங்கின் போது மற்ற போன்களைப் போல் இல்லாமல் போன் heat ஆவதில்லை. battery drain ஆவதில்லை. மற்ற போன்களில் இருந்து தனித்து செயல்படுகிறது. ரூ. 25,999விலையில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.

publive-image

ரூ.30,000க்கு கீழ் உள்ள சிறந்த கேமிங் போன் எது?

செயல்திறன் அடிப்படையில் போன் வாங்க விரும்பினால், iQOO Neo 7 சிறந்ததாக உள்ளது. அதே நேரத்தில் பிரீமியம் கட்டமைப்பைத் தேடுபவர்கள் Poco F4 வாங்கலாம். இது அனைத்திலும் சிறந்தாக உள்ளது. ரூ.25,000க்கு கீழ் பட்ஜெட்டில் போன் வாங்க விரும்பினால் எல்.சி.டி டிஸ்ப்ளே ஓகே என்றால் Redmi K50i தேர்ந்தெடுக்கலாம்.

நீங்கள் கேம் விளையாடும் போது அடிக்கடி போட்டோ கிளிக் செய்து பார்ப்பவராக இருந்தால் Realme GT Neo 3T அல்லது Nothing Phone (1) வாங்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment