Advertisment

டைப் ரைட்டர் தான் ஆனா இது வேறமாறி.. பேசலாம், டைப் செய்யலாம்.. 'கோஸ்ட்ரைட்டர்' பற்றி தெரியுமா?

கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence - AI) மூலம் டைப் ரைட்டருடன் சேட் செய்து கொண்டே தட்டச்சு செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
டைப் ரைட்டர் தான் ஆனா இது வேறமாறி.. பேசலாம், டைப் செய்யலாம்.. 'கோஸ்ட்ரைட்டர்' பற்றி தெரியுமா?

டைப் ரைட்டர் என்று கூறப்படும் தட்டச்சுப்பொறி ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தது. குறிப்பாக 70, 80களில் டைப் ரைட்டிங் பயிற்சி மிகவும் பிரபலமாக இருந்தது. திரைப்படங்களிலும் டைப் ரைட்டிங் காட்சிகள் இல்லாமல் இல்லை. அப்போது அரசு வேலை பெற டைப் ரைட்டிங் தெரிந்திருப்பது அவசியம் என்று இருந்தது. அந்த அளவிற்கு தட்டச்சுப்பொறி முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தது. நாளடைவில் தொழில் நுட்ப வளர்ச்சியால் டைப் ரைட்டிங் மையங்கள் குறைந்து போனது. கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் என தொழில் நுட்பம் நவீன் வளர்ச்சியடைந்தது. இந்தநிலையில், கேரளாவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் டைப் ரைட்டிங் இயந்திரத்தை இக்காலத்திற்கு ஏற்ப மாற்றி வடிவடைத்துள்ளார்.

Advertisment

கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த பொறியாளர் அரவிந்த் சஞ்சீவ் என்பவர், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தட்டச்சு செய்யும் நபருடன் சேட் செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். AI இணைக்கப்பட்ட டைப் ரைட்டர் 'கோஸ்ட்ரைட்டர்' என்று கூறுப்படுகிறது. இந்த தட்டச்சுப்பொறி (Type writer) முற்றிலும் அனலாக் சாதனம் ( Analog device). Physical interaction இதன் தனித்துவம். அது தான் இங்கு செய்யப்பட்டுள்ளது என்றார்.

publive-image

புதிய சாதனங்களை விட பழையவற்றில் இக்காலத்திற்கு ஏற்ப புதுமையை புகுத்த விரும்பினோம் என்று கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சஞ்சீவ், 1990 களில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தில் உபயோகிக்கப்படும் AX-325 தட்டச்சுப்பொறியை வாங்கினார். அதில் மாற்றங்களை செய்ய விரும்பினார். மறுசீரமைப்பு செய்தார். பிறகு, இயந்திரத்தில் இப்போது இரண்டு பலகைகள் உள்ளன. ஒன்று அர்டுயினோ போர்டு, குறைந்த விலை மைக்ரோகண்ட்ரோலர் உள்ளனர். மற்றொன்று ராஸ்பெர்ரி பை. ஆர்டுயினோ ராஸ்பெர்ரி பைக்கு சிக்னல்களை அனுப்புகிறது, இது OpenAI இன் GPT-3 பொருத்தப்பட்டுள்ளது. ChatGPT ஒரு பெரிய மொழியை இயக்கும் மாதிரியாகும்.

publive-image

நான் எலக்ட்ரானிக் தட்டச்சுப்பொறியைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் இது எனக்கு ரிவர்ஸ் இன்ஜினியர் மற்றும் தட்டச்சுப்பொறியிலிருந்து விசைகளைப் படிக்க உதவியது, ஒரு தொலைநகல் இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்று அவர் கூறினார்.

மீடியேட்டிவ் வே - கோஸ்ட்ரைட்டர்

Lumen ஆக்மென்டட் ரியாலிட்டி சாதனத்தின் பின்னால் ஒரு ஸ்டார்ட்அப்பை நடத்தி, மாணவர்களுக்கு AI ஐக் கற்பிப்பதோடு, விண்டேஜ் ஏக்கத்தால் கவரப்படுபவர்களுக்கு AI-யை அறிமுகப்படுத்த விரும்புவதாகக் கூறினார். டிஜிட்டல் திரையில் AI கவனம் செலுத்துகிறது. AI-யிடம் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் அனைத்து விஷயங்களையும் ஒரு நல்ல வகையான மீடியேட்டிவ் வேயில் கொடுக்கிறது. கோஸ்ட்ரைட்டரில் AI-யை பொருத்தினேன். மக்கள் டைப் செய்யும் போது அது கேட்கும். அது நம்மிடம் பதிலளித்து காகிதத்தில் தட்டச்சு செய்கிறது என்று சஞ்சீவ் கூறினார்.

publive-image

Arvind Sanjeev

கோஸ்ட் ரைட்டர் புதுமையானது. AI பயன்படுத்தாவர்களுக்கு இந்த அனுபவத்தை தர விரும்பினேன். அதோடு பாதுகாப்பான முறையில் வழங்க விரும்பினேன் என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment