Advertisment

ஜிமெயில் அப்டேட்.. விரைவில் வருகிறது இந்த வசதி.. என்ன தெரியுமா?

ஜிமெயிலில் விரைவில் 'எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்' வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gmail

Gmail

ஜிமெயில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் ஒரு இணையதளம். கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான ஜிமெயில் பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அனைத்து மக்களும் ஜிமெயில் பயன்படுத்துகின்றனர். பணி தொடர்பாக, சொந்த தேவைக்காக என பல்வேறு தேவைகளுக்காக ஜிமெயில் பயன்படுத்துகின்றனர். ஒரே அக்கவுண்டை போன், லேப்டாப், கணினியில் ஜிமெயில் sync செய்து பயன்படுத்தலாம். ஜிமெயிலில் பணி தொடர்பான ஆவணங்கள், நாம் பொருள் வாங்கியதற்கான பில் எனப் பல முக்கிய ஆவணங்கள் வைத்திருப்போம். அந்தவகையில் அவை எல்லாம் பாதுகாப்பானதாக இருக்கிறதா என சில நேரங்களில் நினைத்திருப்போம்.

Advertisment

இதற்கு விடை அளிக்கும் வகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அம்சம் தற்போது பீட்டா சோதனையில் உள்ளது. Google Workspace Enterprise Plus, Education Plus மற்றும் Education Standard போன்ற கல்வி சார்ந்த கணக்குகளுக்கு வழங்கப்படுகிறது.

ஜிமெயிலுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் ஏன் தேவை?

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (end-to-end encryption) வசதி தகவல்களை பாதுகாப்பாக வைக்கும். தகவல் அனுப்புநர், பெறுநர் இடத்தில் மட்டும் இருக்கும். அனுப்புநரால் என்க்ரிப்ட் செய்யப்படுவதை மட்டும் உறுதி செய்யும். எந்த ஒரு மூன்றாம் தரப்பு நபரும், ஏன் கூகுளால் கூட தகவல், செய்திகளை டிக்ரிப்ட் செய்யவோ அல்லது படிக்கவோ முடியாது.

கூகுள் டிரைவ், டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைடுகள், கூகுள் மீட் மற்றும் கூகுள் கேலெண்டர் ஆகியவற்றில் ஏற்கனவே கிளையன்ட் சைடு என்க்ரிப்ஷனை கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது. இப்போது அலுவலகம், கல்வி பயன்பாடு கணக்குகளுக்கு என்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. விரைவில் தனிப்பட்ட பயனர் கணக்குகளுக்கும் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளையன்ட் சைடு என்க்ரிப்ஷன் (client-side encryption) ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கும் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment