Advertisment

கூகுள் சாட் : டேட்டா கசிவைத் தடுக்க புதிய அம்சம் அறிமுகம்!

Google chat launches new feature to prevent data leaks Tamil News பீட்டா புதுப்பிப்பின் ஒரு பகுதியாக இந்த புதிய அம்சம் வருவதால், இந்த அம்சத்துடன் சில பிழைகள் இருக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Google chat launches new feature to prevent data leaks Tamil News

Google chat launches new feature to prevent data leaks Tamil News

Google chat launches new feature to prevent data leaks Tamil News : உங்கள் டேட்டா கசிந்துவிடும் என்ற அச்சுறுத்தல் இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய கவலையாக உள்ளது. வணிகங்கள் மற்றும் குழுக்களின் டேட்டா கசிவதைத் தடுக்க உதவும் ஒரு திட்டத்தை உருவாக்கி வருவதாக கூகுள் அறிவித்துள்ளது.

Advertisment

கூகுள் சாட்டில் அட்மின்களுக்கான டேட்டா இழப்பு தடுப்பு (டிஎல்பி) விதிகள் மற்றும் கொள்கைகளில் வேலை செய்கிறது கூகுள் நிறுவனம். தற்போது, இந்தப் புதிய அம்சம் பீட்டா நிலையில் உள்ளது. எனவே நீங்கள் அதை சோதிக்க ஆர்வமாக இருந்தால் அதற்காகப் பதிவு செய்ய வேண்டும்.

சென்சிடிவ் வாய்ந்த உள்ளடக்கத்தை மற்றவர்களுடன் தவறாமல் பகிர்ந்து கொள்ளும் மக்களுக்கு இந்த டிஎல்பி விதிகள் பொருந்தும். குழுவிற்கு வெளியே ரகசியத் தகவல்கள் கசிவதைத் தடுக்க இது மேலும் உதவும்.

அட்மினுக்கு ஒரு குறிப்பிட்ட விதிகள் மற்றும் அமைப்புகளுக்கான அணுகல் வழங்கப்படும்.

அவை இயக்கப்பட்டவுடன், குழுவில் உள்ள செய்திகள் முக்கியமானதாகக் கருதப்படும் மற்றும் எந்த தகவலுக்கும் ஸ்கேன் செய்யப்படும். கூடுதலாக, ஒவ்வொரு செய்தியும் படமும் அனுப்பப்படுவதற்கு முன்பு அவை ஸ்கேன் செய்யப்படும். இணையதளங்களுக்கான இணைப்புகள் ஸ்கேன் செய்யப்படாது என்று கூகுள் கூறுகிறது.

டிஎல்பி விதிகள், கூகுள் சாட்டுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது, குரோம் மற்றும் டிரைவ் உள்ளிட்ட பிற தளங்களுக்குப் பயன்படுத்த முடியும் என்று கூகுள் குறிப்பிடுகிறது.

ஒரு பயனர் கூகுள் டிரைவைப் பயன்படுத்தி முக்கியமான தகவல்களை அனுப்ப முயன்றால், அது தடுக்கப்படும். கூடுதலாக, மீறல் ஏற்படும் போது கூகுள் அட்மினுக்கு அறிவிக்கும். ஒரு உறுப்பினர் முக்கியமான தகவல்களைப் பகிர முயற்சி செய்தால், அப்போதும் அறிக்கையை அட்மின் பெறுவார். பீட்டா புதுப்பிப்பின் ஒரு பகுதியாக இந்த புதிய அம்சம் வருவதால், இந்த அம்சத்துடன் சில பிழைகள் இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment