Advertisment

புத்தம் புதிய அப்டேட்டுகளுடன் ஜிமெயில் அஞ்சல், சாட், மீட் மற்றும் ரூம்ஸ்

Google Gmail Chats Meet Rooms Updates இப்போது ‘மெயில்,’ ‘சாட்ஸ்,’ ‘ரூம்ஸ்’ மற்றும் ‘மீட்’ உள்ளிட்ட நான்கு டேப்களுக்கான அணுகலைப் பெறலாம்.

author-image
WebDesk
New Update
Google Gmail Chats Meet Rooms Updates Tamil News

Google Gmail Chats Meet Rooms Updates Tamil News

Google Gmail Chats Meet Rooms Updates Tamil News : கூகுள் சாட்ஸ் மற்றும் கூகுள் ரூம்ஸ்களுக்கு நேரடி அணுகலை இப்போது ஜிமெயில் வழங்குகிறது. அதன் சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் வெவ்வேறு பயன்பாடுகளைத் திறக்க கூகுள் விரும்பவில்லை. எனவே, இந்தத் தேடல் நிறுவனம் அவற்றை ஜிமெயிலில் ஒருங்கிணைத்துள்ளது. இனி, உங்கள் ஜிமெயில் திறந்திருந்தால், கூகுள் சாட்ஸ் பயன்பாட்டைப் பயன்படுத்த அதனை மூட தேவையில்லை. பயனர்கள் இப்போது ‘மெயில்,’ ‘சாட்ஸ்,’ ‘ரூம்ஸ்’ மற்றும் ‘மீட்’ உள்ளிட்ட நான்கு டேப்களுக்கான அணுகலைப் பெறுகிறார்கள்.

Advertisment

கூகுள் சாட்ஸ் vs ரூம்ஸ் vs மீட் : வித்தியாசம் என்ன?

மெயில் பிரிவில், உங்கள் எல்லா மின்னஞ்சல்களையும் நீங்கள் சரிபார்க்க முடியும். கூகுள் சாட்ஸ் எந்தவொரு நபருடனும் அரட்டை அடிக்கப் பயன்படுத்தலாம். கூட்டங்கள் அல்லது வீடியோ அழைப்புகளை ஹோஸ்ட் செய்ய கூகுள் ‘மீட்’ பயன்படுத்தப்படலாம்.

பல நபர்களுடன் ஏதாவது பகிர அல்லது விவாதிக்க விரும்பினால் நீங்கள் ‘ரூம்ஸ்’ உருவாக்கலாம். இந்த பிரிவில், ஹாங்கவுட்ஸ் பயன்பாட்டில் கிடைக்கும் அனைத்து அரட்டைகளையும் கூகுள் காண்பிக்கும். அவை விரைவில் செயலிழந்துவிடும். கடந்த ஆண்டு, கூகுள் சாட்ஸ்க்கு பதிலாக ஹாங்கவுட்ஸ் மாற்றப்படும் என்றும் இந்த சேவை இலவசமாகக் கிடைக்கும் என்றும் கூகுள் அறிவித்தது. ஹாங்கவுட்ஸ் உரையாடல்கள் மற்றும் பிற தரவைத் தானாகவே Google Chats பயன்பாட்டிற்கு மாற்றும் என்றும் மென்பொருள் நிறுவனமானது குறிப்பிட்டது.

ஆண்டிராய்டு, iOS பயனர்களுக்கு புதிய கூகுள் சாட்ஸ், ரூம்ஸ், மீட் டேப் கிடைக்குமா?

புதிய டேப்கள் ஆண்டிராய்டு மற்றும் வெப் பயனர்களுக்குக் கிடைக்கின்றன. இந்த நேரத்தில், iOS பயனர்கள் இந்த அம்சத்தை எப்போது பெறுவார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. புதிய புதுப்பிப்பு இயல்புநிலையாகக் கிடைக்காது. எனவே, நீங்கள் அமைப்புகளிலிருந்து “ஆரம்ப அணுகல்” விருப்பத்தை இயக்க வேண்டும். ஜிமெயிலில் உள்ள அனைத்து புதிய டேப்களிலும் நீங்கள் எவ்வாறு அணுகலாம் என்பது இங்கே. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அசல் பதிப்பிற்கு மாறலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆண்டிராய்டில் ஜிமெயில் : கூகுள் சாட்ஸ், ரூம்ஸ், மீட் டேப்களை எவ்வாறு அணுகுவது?

ஸ்டெப் 1: உங்கள் ஸ்மார்ட்போனில் ஜிமெயிலைத் திறக்கவும்.

ஸ்டெப் 2: பயன்பாட்டின் இடது மூலையில் அமைந்துள்ள ஹாம்பர்கர் விருப்பத்தை க்ளிக் செய்வதன் மூலம் அமைப்புகளுக்குச் செல்லவும்.

ஸ்டெப் 3: ‘பொது’ பகுதிக்குச் சென்று ‘சாட்டை (ஆரம்ப அணுகல்) தட்டவும்.’ குறிப்பு: உங்களிடம் பல ஜிமெயில் ஐடிகள் இருந்தால், அமைப்புகள் பிரிவை அடைந்த பிறகு எந்த ஜிமெயில் ஐடி வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 4: ஜிமெயில் பயன்பாட்டில் உள்ள நான்கு டேப்களுக்கும் அணுகலைப் பெற ‘இதை முயற்சி செய்யவும்’ விருப்பத்தை மீண்டும் க்ளிக் செய்யவும்.

ஜிமெயில் வலை பதிப்பு: கூகுள் சாட், ரூம்ஸ், மீட் டேப்களை எவ்வாறு அணுகுவது?

கூகுள் சாட், கூகுள் ரூம்ஸ் மற்றும் கூகுள் மீட் டேப்களை ஜிமெயில் தானாக சேர்க்காது. எனவே, அமைப்புகள் பிரிவில் அதைக் கைமுறையாக மாற்ற வேண்டும். ஜிமெயிலின் வலை பதிப்பில் குறிப்பிடப்பட்ட பயன்பாடுகளை எவ்வாறு அணுகலாம் என்பது இங்கே.

ஸ்டெப் 1: https://mail.google.com/mail/u/0/#settings/chat வலைத்தளத்திற்குச் செல்லவும்

ஸ்டெப் 2: நீங்கள் குறிப்பிட்ட தளத்தைத் திறந்ததும், நீங்கள் செய்ய வேண்டியது “கூகுள் சாட்டை (ஆரம்பக்கால அணுகல்)” என்பதை க்ளிக் செய்து பாப்-அப் பெட்டியை உறுதிப்படுத்தவும். பிந்தையது “கூகுள் அரட்டையை இயக்குவது புதிய அனுபவத்தையும் அம்சங்களையும் முயற்சி செய்ய உங்களை அனுமதிக்கிறது. பிழைகள் மற்றும் பிற சிக்கல்களை நீங்கள் அனுபவிக்கலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் பழைய அரட்டை அமைப்பிற்கு மாறலாம்”

ஸ்டெப் 3: இதை உறுதிசெய்த பிறகு, ‘மாற்றங்களைச் சேமி’ பட்டனை கிளிக் செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Google Gmail
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment