Advertisment

IOS-க்கான கூகுளின் அசத்தலான புதிய அம்சம் அறிமுகம்!

Google launches new feature to delete web activity on IOS கூகுள் பயன்பாட்டிற்குச் சென்று, உங்கள் சுயவிவர ஐகானை க்ளிக் செய்யவும். பின்னர் வரலாற்றைத் தேடி இதனை மாற்றலாம்.

author-image
WebDesk
New Update
Google launches new feature to delete web activity on IOS

Google launches new feature to delete web activity on IOS

Google launches new feature to delete web activity on IOS : கூகுள் தனது புதிய தனியுரிமை அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பயனர்கள் சேமித்த கடைசி 15 நிமிட தேடல் வரலாற்றை விரைவாக நீக்க அனுமதிக்கிறது. இந்த புதிய அம்சம் இப்போது iOS-ல் கூகுள் பயன்பாட்டில் கிடைக்கிறது. மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக வெளியிடத் தொடங்கும். இந்த அம்சம் முதலில் மே மாதம் கூகுள் ஐ / ஓ-வில் அறிவிக்கப்பட்டது. இப்போது, இது iOS சாதனங்களுக்கும் வழிவகுக்கிறது.

Advertisment

உங்கள் சாதனத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், வரலாற்றைக் கைமுறையாக நீக்க அமைப்புகளுக்குச் செல்ல விரும்பாதவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த விருப்பத்தை நீங்கள் இயக்கினால், ஒவ்வொரு மூன்று, 18 அல்லது 36 மாதங்களுக்கும் கூகுள் பயன்பாடு தானாகவே உங்கள் தேடல் செயல்பாட்டை அழிக்கும். கூகுள் இயல்புநிலையாக 18 மாதங்களில் கால அளவை அமைக்கிறது. கூகுள் பயன்பாட்டிற்குச் சென்று, உங்கள் சுயவிவர ஐகானை க்ளிக் செய்யவும். பின்னர் வரலாற்றைத் தேடி இதனை மாற்றலாம்.

சமீபத்திய வலைப்பதிவு போஸ்ட்டில், கூகுள் இந்த அம்சம் iOS பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்திருக்கிறது என்று தெரிவித்தது. இந்த புதிய அம்சம், பயன்பாட்டில் ‘கடைசி 15 நிமிடங்களை நீக்கு’ விருப்பத்தைக் கொண்டுவருகிறது. இது கடைசி 15 நிமிடங்களுக்கு உங்கள் வலை மற்றும் பயன்பாட்டு செயல்பாட்டு வரலாற்றை விரைவாக அழிக்க உங்களை அனுமதிக்கும்.

உங்கள் சுயவிவரத்தை க்ளிக் செய்யும்போது, விருப்பத்தை iOS-ல் உள்ள கூகுள் பயன்பாடு வழியாக அணுகலாம். கூகுள் தேடலுக்கான மறைநிலை பயன்முறையையும் தானாக நீக்குதல் அம்சத்தையும் வழங்குகிறது. ஆனால், இந்த புதிய விருப்பம் பயன்முறையை சற்று எளிதாக்குகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Google Ios
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment