Advertisment

Google Pay, Paytm : உங்கள் தொடர்புகளுடன் பில்களையும் செலவுகளையும் எவ்வாறு பிரிப்பது?

Google pay Paytm how to split bills and expenses with your contacts Tamil News கூகுள் பே மற்றும் பேடிஎம் இரண்டிலும் உங்கள் நண்பர்களுடன் பில்லைப் பிரிப்பது எப்படி என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Google pay Paytm how to split bills and expenses with your contacts Tamil News

Google pay Paytm how to split bills and expenses with your contacts Tamil News

Google pay Paytm how to split bills and expenses with your contacts Tamil News : Google Pay மற்றும் Paytm இரண்டிலும் ஒரு புதிய அம்சம் வந்துள்ளது. இந்த அம்சம் பயனர்கள் ஒரு உணவகத்தில் பில்லைப் பிரிக்கும்போது, ​​பரிசுக்காகவோ அல்லது அதைப் போன்ற ஏதேனும் பயன்பாட்டுக்காகவோ தங்கள் தொடர்புகளுடன் பில்லைப் பிரிக்க உதவுகிறது.

Advertisment

ஒவ்வொரு நண்பரும் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதைப் பார்க்க உங்கள் கால்குலேட்டர் பயன்பாட்டைக் கைமுறையாகத் திறப்பதை இந்த அம்சம் நீக்குகிறது. இதில், மற்ற உறுப்பினர்களிடமிருந்து சமமான தொகையைப் பெற்று ஒருவர் பிரதான பில்லைச் செலுத்த உதவுகிறது. கூகுள் பே மற்றும் பேடிஎம் இரண்டிலும் உங்கள் நண்பர்களுடன் பில்லைப் பிரிப்பது எப்படி என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கூகுள் பேயில் பில்லைப் பிரிப்பது எப்படி?

Google Pay-யைத் திறந்து, முதன்மைப் பக்கத்தில் உள்ள "புதிய கட்டணம்" பட்டனை க்ளிக் செய்யவும். அடுத்த திரையில், ‘பணத்தை மாற்றுதல்’ டேபிற்கு கீழே, “புதிய குழு” விருப்பத்தைப் பயனர்கள் காண்பார்கள். இந்த விருப்பத்தை கிளிக் செய்யவும்.

இப்போது ஒரு புதிய திரை திறக்கும். அங்கு நீங்கள் குழுவில் பில்லைப் பிரிக்கத் தொடர்புகளைச் சேர்க்கலாம். உங்களின் சமீபத்திய தொடர்புகள் மற்றும் Google Pay தொடர்புகள் அனைத்தையும் கீழே காண்பீர்கள். நீங்கள் பில்லைப் பிரிக்க விரும்பும் தொடர்புகளை க்ளிக் செய்யவும்.

publive-image

அடுத்த திரையில், குழுவிற்கு ஒரு பெயரைக் கொடுத்து அதை உருவாக்க முடியும். குழுவை உருவாக்கியதும், நீங்கள் அதை உள்ளிட்டதும், அதற்கு கீழே 'செலவைப் பிரி' பட்டனை பார்க்க முடியும்.

உறுப்பினர்களிடையே பிரிப்பதற்கான தொகையை உள்ளிட்ட பிறகு, நீங்கள் தொகையை சமமாகப் பிரிக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட பயனர் செலுத்த வேண்டிய தனிப்பயன் தொகையை உள்ளிடலாம். குறிப்பிட்ட செலவிற்கு அந்த உறுப்பினர் பணம் செலுத்தத் தேவையில்லை என்றால், குழுவில் உள்ள ஒருவரை நீங்கள் நீக்கலாம்.

publive-image

அளவுருக்கள் அமைக்கப்பட்டதும், கட்டணக் கோரிக்கையை உயர்த்த ‘கோரிக்கையை அனுப்பு’ பட்டனை தட்டவும். குழுவின் முதன்மைத் திரையிலிருந்து பேமென்ட் பிரிவின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, எந்தெந்த நண்பர்கள் தொகையைச் செலுத்தினார்கள் என்பதைச் சரிபார்க்கலாம்.

Paytm-ல் பில் பிரிப்பது எப்படி?

Paytm-ல் செலவைப் பிரிக்க, பயன்பாட்டைத் திறந்து உரையாடல்கள் பக்கத்திற்குச் செல்ல வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும். கீழே உள்ள இரண்டு விருப்பங்களில், 'ஸ்பிலிட் பில்' விருப்பத்தைத் தேடுங்கள்.

ஒரு புதிய பக்கத்தை உள்ளிடுவதற்கான விருப்பத்தை க்ளிக் செய்யவும். அங்கு நீங்கள் பிரிக்க வேண்டிய தொகையை உள்ளிடலாம் மற்றும் நீங்கள் பில் பிரிக்க விரும்பும் தொடர்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

publive-image

அடுத்த பக்கத்தில் ‘சமமான ஆட்டோ-ஸ்பிளிட்’ விருப்பத்தைத் தேர்வு செய்யலாம் அல்லது ஒவ்வொரு உறுப்பினரும் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதைக் கைமுறையாக மாற்றலாம். அதைத் தொடர்ந்து நீங்கள் கோரிக்கையை அனுப்பலாம்.

பிரதான குழுப் பக்கத்தில் உள்ள தொகையைத் தட்டினால், எந்த உறுப்பினர்கள் பணம் செலுத்தியுள்ளனர் மற்றும் இன்னும் செலுத்த வேண்டியவை உட்பட, பிரிப்பு பற்றிய கூடுதல் தகவலை உங்களுக்கு வழங்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Google Paytm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment