Advertisment

iOS பயனர்களுக்கு கூகுள் போட்டோஸ் வழங்கும் புதிய அம்சங்கள்!

Google photos brings new features to iOS users with google one subscription Tamil News கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் ஒன் சந்தா இரண்டையும் பெற்றிருந்தால், இந்த புதிய அம்சங்கள் Android பயனர்களுக்கு ஏற்கனவே கிடைக்கும்.

author-image
WebDesk
New Update
Google photos brings new features to iOS users with google one subscription Tamil News

Google photos brings new features to iOS users with google one subscription Tamil News

Google photos brings new features to iOS users with google one subscription Tamil News : iOS-ல் உள்ள கூகுள் ஒன் சந்தாதாரர்கள், கூகுள் போட்டோஸை பயன்படுத்துபவர்கள், போர்ட்ரெய்ட் லைட், பிலர் மற்றும் ஸ்மார்ட் பரிந்துரைகள் உள்ளிட்ட சில புதிய எடிட்டிங் அம்சங்களுக்கான அணுகலை விரைவில் பெறுவார்கள்.

Advertisment

பல iOS பயனர்களின் புகைப்படங்களைத் திருத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் கூகுள் போட்டோஸ் விருப்பமாக இருக்காது என்றாலும், இப்போது இவர்களுக்குக் கிடைக்கும் புதிய எடிட்டிங் விருப்பங்களின் பட்டியல் இதோ.

போர்ட்ரெய்ட் லைட்: போர்ட்ரெய்ட் லைட், போர்ட்ரெய்ட் அல்லது நபர்களின் படங்களில் செயற்கை விளக்கு விளைவைச் சேர்க்கப் பயனர்களை அனுமதிக்கிறது. லைட்டிங் எஃபக்ட் நிலை மற்றும் பிரகாசம் பயனர்களின் விருப்பத்திற்கு மாற்றப்படலாம்.

Blur : பெயர் குறிப்பிடுவது போல, இது மங்கலான எஃபக்ட் கொடுக்கும். ஏற்கனவே போர்ட்ரெய்ட் பயன்முறையில் எடுக்கப்படாத நபர்களின் படங்களின் பின்னணியை மங்கலாக்கப் பயனர்களை அனுமதிக்கிறது.

கலர் ஃபோகஸ்: வண்ணக் குவிப்பு பின்னணியை சிதைக்க உங்களை இது அனுமதிக்கிறது. அதே நேரத்தில் முன்புறத்தை வண்ணமயமாக வைத்து பொருள்களை அல்லது நபர்களை இன்னும் தனித்துவமாக்குகிறது.

HDR: HDR பயன்முறையானது புகைப்படத்தின் முழுவதிலும் மேம்படுத்தப்பட்ட பிரகாசம் மற்றும் மாறுபாட்டைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது.

ஸ்கை: இந்த கருவி பல விருப்பங்கள் மற்றும் வண்ணம் மற்றும் மாறுபாடு போன்ற சிறந்த டியூனிங் அமைப்புகளிலிருந்து தேர்வு செய்வதன் மூலம் படங்களில் வானம் எப்படி இருக்கிறது என்பதை மாற்ற உதவுகிறது.

இந்த அம்சங்களை யார் பெறுவார்கள்?

iOS 14 மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து iPhone பயனர்களும் கூகுள் போடோஸை பயன்படுத்தும் வரை மற்றும் கூகுள் ஒன் சந்தாவிற்குப் பணம் செலுத்தும் வரை இந்த அம்சத்தைப் பெறுவார்கள்.

கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் ஒன் சந்தா இரண்டையும் பெற்றிருந்தால், இந்த புதிய அம்சங்கள் Android பயனர்களுக்கு ஏற்கனவே கிடைக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Google Ios
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment