Advertisment

ஜூன் 1 அன்று கூகுள் போட்டோஸ் ‘இலவச சேமிப்பிடம்’ முடிவடைகிறது : சிறந்த மாற்றுகள் என்ன?

Google photos ending free storage on June 1 best alternatives அடிப்படை 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டத்திற்கு மாதத்திற்கு ரூ.30 செலவாகும். ரூ.360 விலையில் ஆண்டு திட்டத்தையும் வாங்கலாம்.

author-image
WebDesk
New Update
Google photos ending free storage on June 1 best alternatives Tamil News

Google photos ending free storage on June 1 best alternatives Tamil News

Google photos ending free storage on June 1 best alternatives Tamil News : கூகுள் புகைப்படங்கள் அதன் பயனர்களுக்கு இலவச அன்லிமிடெட் சேமிப்பக விருப்பத்தை வழங்குவதை விரைவில் நிறுத்தவுள்ளது. ஜூன் 1 முதல், உங்கள் 15 ஜிபி கூகுள் சேமிப்பக இடம் நிரம்பியிருந்தால், நீங்கள் உயர்தர விருப்பத்தின் கீழ் புகைப்படங்களைப் பதிவேற்றி வருகிறீர்கள் என்றால், மேலும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சேமிக்க கூகுள் ஒன் சந்தாவை வாங்க வேண்டும். தற்போதுள்ள அனைத்து உயர்தர உள்ளடக்கங்களும் சேமிப்பக ஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

Advertisment

முந்தைய எல்லா பதிவேற்றங்களும் கணக்கு சேமிப்பகத்திற்குக் கணக்கிடப்படாததால், இலவச சேமிப்பக அம்சத்தைப் பயன்படுத்த உங்களுக்கு நான்கு நாட்களே உள்ளன. உங்களிடம் கூகுள் பிக்சல் 5 அல்லது முந்தைய பதிப்புகள் இருந்தால், இந்த புதிய சேமிப்புக் கொள்கை உங்களைப் பாதிக்காது. பிக்சல் தொலைபேசி பயனர்கள் அன்லிமிடெட் இலவச சேமிப்பக விருப்பத்தைப் பெறுவார்கள்.

கூகுள் புகைப்படங்கள்: சேமிப்பிடம் இடத்தை விரைவாக சுத்தம் செய்வது எப்படி?

சேமிப்பிட இடத்தை விரைவாக சுத்தம் செய்ய, கூகுள் புகைப்படங்கள் புதிய சேமிப்பக மேலாண்மை கருவியைச் சேர்த்துள்ளன. இந்த கருவி மூலம், நீங்கள் விரும்பாத மங்கலான புகைப்படங்கள், திரைக்காட்சிகள், பெரிய வீடியோக்கள் மற்றும் பிற புகைப்படங்களை நீக்கலாம்.

கூகுள் புகைப்படங்கள்> பேக்கப் மற்றும் அமைப்புகளை சிங்க் செய்க > சேமிப்பிடத்தை நிர்வகித்தல் ஆகியவற்றில் உள்ள கணக்கு அமைப்புகளைப் பார்வையிடுவதன் மூலம் இந்த கருவியை நீங்கள் அணுக முடியும்.

கூகுளின் கருவி, பெரிய ஃபைல்கள், அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும் மின்னஞ்சல்களை மதிப்பாய்வு செய்ய உங்களை அனுமதிக்கும். மேலும், இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மின்னஞ்சல்களை நீக்கும்போது நீங்கள் எவ்வளவு இடத்தை சேமிப்பீர்கள் என்பதையும் அறியலாம்.

கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் திட்டங்கள், இந்திய விலை

கூகுள் ஒன்னின் அடிப்படை சந்தா 100 ஜிபி சேமிப்பு இடத்துடன் வருகிறது. மேலும், மாதத்திற்கு ரூ.130 அல்லது ஆண்டு அடிப்படையில் ரூ.1,300 செலவாகும். உங்கள் குடும்பத்துடனும் சேமிப்பிடம் இடத்தைப் பகிரலாம். 200 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டமும் உள்ளது. இதன் விலை மாதத்திற்கு ரூ.210 அல்லது ஆண்டுக்கு ரூ.2,100 ஆகும். 2TB-க்கு, நீங்கள் மாதத்திற்கு ரூ.650 மற்றும் வருடத்திற்கு ரூ.6,500 செலுத்த வேண்டும். 10TB-க்கு, மாதத்திற்கு ரூ.3,250 ஆகும்.

கூகுள் புகைப்படங்களுக்கான மாற்றுகள்

டிஜிபாக்ஸ்

டிஜிபாக்ஸ் இந்தியாவை சொந்தமாகக் கொண்ட கிளவுட் ஸ்டோரேஜ் தளம். இது கூகுள் புகைப்படங்களைப் போலல்லாமல், 20 ஜிபி இலவச இடத்தை வழங்குகிறது. ஜிமெயில் ஒருங்கிணைப்பு, அன்லிமிடெட் வெளிப்புற கொலாபரேஷன் மற்றும் இறுதி-குறியாக்கத்தையும் ஆதரிக்கிறது. அடிப்படை 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டத்திற்கு மாதத்திற்கு ரூ.30 செலவாகும். ரூ.360 விலையில் ஆண்டு திட்டத்தையும் வாங்கலாம்.

டீகோ

இரண்டாவது சிறந்த மாற்று டீகோ. இது, 100 ஜிபி இலவச க்ளவுட் சேமிப்பிடத்தை வழங்குகிறது. எல்லா ஃபைல்களும் இறுதி குறியாக்கப்பட்டவை என்று நிறுவனம் கூறுகிறது. 500 ஜிபி சேமிப்பு திட்டத்திற்கு மாதத்திற்கு சுமார் 220 ரூபாய் செலவாகும். 10TB திட்டமும் உள்ளது. இதன் விலை மாதத்திற்குத் தோராயமாக ரூ.735. இலவச பதிப்பில் விளம்பரங்கள் இருப்பதையும், கட்டண க்ளவுட் சேமிப்பக திட்டங்கள் விளம்பரமில்லாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட் ஒன்ட்ரைவ்

ஒன்ட்ரைவ் என்பது மைக்ரோசாப்டின் கிளவுட் ஸ்டோரேஜ் சேவை. இது தானாக பேக்கப், தானாக சிங்க் போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த சேவையுடன் 5 ஜிபி இலவச சேமிப்பிடத்தை மட்டுமே பெறுவீர்கள். ஆனால், குறைந்தபட்சம் 100 ஜிபி சேமிப்பிடத்தை மாதத்திற்கு ரூ.௧௪௦-க்கு பெறுவீர்கள். உங்களிடம் மைக்ரோசாஃப்ட் 365 சந்தா இருந்தால், நீங்கள் ஏற்கனவே 1TB சேமிப்பிட இடத்தைப் பெற்றிருப்பதால் நிறுவனத்தின் ஒன்ட்ரைவ் சந்தாவை வாங்க வேண்டியதில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment