Advertisment

கூகுள் புகைப்படங்களை பத்திரமாக லாக் செய்வது எப்படி?

Google photos how to set up a locked folder and hide your pictures Tamil News லாக் செய்யப்பட்ட ஃபோல்டரை அமைப்பதற்கு முன், உங்கள் மொபைலில் ஸ்க்ரீன் லாக் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Google photos how to set up a locked folder and hide your pictures Tamil News

Google photos how to set up a locked folder and hide your pictures Tamil News

கூகுள் போட்டோஸ் இப்போது பயனர்கள் தங்கள் ஃபோனில் உள்ள முக்கியமான புகைப்படங்களைக் கடவுச்சொல்லுக்குப் பின்னால் மறைக்க அனுமதிக்கிறது. இது லாக் செய்யப்பட்ட ஃபோல்டர் எனும் புதிய அம்சத்தின் மூலம் செய்யப்படுகிறது. மேலும் இது தற்போது பிக்சல் ஃபோன்களுக்கு மட்டுமே பிரத்தியேகமானது. இருப்பினும், அனைத்து ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் iOS சாதனங்களில் கூட இந்த அம்சத்தை கூகுள் பின்னர் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

Advertisment

கூகுள் புகைப்படங்களின் லாக் செய்யப்பட்ட ஃபோல்டர், உங்களின் முக்கியமான படங்களுக்குத் தனி கோப்புறையை உருவாக்கி அதை உங்கள் மொபைலின் லாக் ஸ்கிரீன் பாஸ்வேர்ட், பேட்டர்ன் அல்லது பின் எண்ணுக்குப் பின்னால் மறைத்து வைக்கும். உங்கள் கைரேகை போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி அதை நீங்கள் கடந்து செல்லலாம்.

கூகுள் போட்டோஸ் லாக் செய்யப்பட்ட ஃபோல்டரை எவ்வாறு அமைப்பது?

லாக் செய்யப்பட்ட ஃபோல்டரை அமைப்பதற்கு முன், உங்கள் மொபைலில் ஸ்க்ரீன் லாக் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்டிராய்டில் இது கடவுச்சொல், பின் அல்லது பேட்டர்னாக இருக்கலாம். நீங்கள் இதனை ஏற்கனவே அமைக்கவில்லை என்றால், இப்போது ஒன்றை அமைக்கவும்.

கூகுள் புகைப்படங்களைத் திறந்து நூலகம் / பயன்பாடுகள் / பூட்டிய கோப்புறைக்குச் செல்லவும். திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றி, பூட்டிய ஃபோல்டரை இங்கே அமைக்கலாம்.

ஒரு ஃபோல்டர் அமைக்கப்பட்டதும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் விரும்பிய புகைப்படங்கள்/வீடியோக்களை கோப்புறையில் நகர்த்த வேண்டும். இதைச் செய்ய, பயனர்கள் கூகுள் புகைப்படங்களைத் திறந்து, அவர்கள் நகர்த்த விரும்பும் படங்களையும் வீடியோக்களையும் தேர்ந்தெடுக்கலாம். அவை அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மேல் வலதுபுறத்தில் உள்ள 'மேலும்' பிரிவின் கீழ் 'பூட்டிய கோப்புறைக்கு நகர்த்து' விருப்பத்தைக் கண்டறியவும்.

லாக் செய்யப்பட்ட ஃபோல்டரை எங்கே கண்டுபிடிப்பது?

லாக் செய்யப்பட்ட கோப்புறையில் உங்கள் மீடியாவைச் சேர்த்தவுடன், உங்கள் மற்ற படங்களுடன் அந்த ஃபைல் இனி காணப்படாது. வேறு எந்த கேலரி பயன்பாட்டிலும் அவை காணப்படாது.

பாதுகாப்பு அம்சமாக, பூட்டிய ஃபோல்டரில் சேர்க்கப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆல்பம் அல்லது போட்டோபுக்கில் காட்டப்படாது. மேலும் Nest Hub போன்ற கூகுளின் ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களிலும் பார்க்க முடியாது.

நீங்கள் உள்ளே வைக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டறிய, கூகுள் புகைப்படங்களைத் திறந்து, பூட்டிய கோப்புறையைக் கண்டறியப் பயன்பாட்டுப் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment