Advertisment

கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் பேடிஎம்

இந்த செயலியை பிளே ஸ்டோரிலிருந்து அகற்றியதற்கான தெளிவான காரணத்தைக் கூகுள் வெளியிடவில்லை.

author-image
WebDesk
New Update
கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் பேடிஎம்

பிளே ஸ்டோரிலிருந்து Paytm செயலியை அகற்றியுள்ளது கூகுள். எனினும் Paytm for Business, Paytm mall, Paytm Money மற்றும் இன்னும் சில செயலிகள் பயன்பாட்டில்தான் இருக்கின்றன. எனினும் மீண்டும் சில மணி நேரங்களில் பிளே ஸ்டோரில் பே டிஎம் இடம் பிடித்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து இதுபற்றி கருத்து தெரிவிக்க Paytm மறுத்து, இந்த விவகாரத்தை நன்கு விசாரித்த பின்னர் இதற்கான அறிக்கையை வெளியிடும் என தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இந்தியாவில் மில்லியன் கணக்கான பயனர்கள் பதிவிறக்கம் செய்த இந்த செயலியை பிளே ஸ்டோரிலிருந்து அகற்றியதற்கான தெளிவான காரணத்தைக் கூகுள் வெளியிடவில்லை. ஆனால், இன்று வெளியிடப்பட்ட வலைத்தள பதிவு ஒன்றில் சூதாட்டக் கொள்கையை மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது.

வலைத்தள பதிவில், "நாங்கள் ஆன்லைன் சூதாட்டங்களை அனுமதிக்கவோ அல்லது சூதாட்டத்தைப் போற்றுவிக்கும் விளையாட்டுப் பந்தய செயலிகளை ஆதரிக்கவோ மாட்டோம். இது, ஓர் நுகர்வோரை வெளிப்புற வலைத்தளத்திற்கு இட்டுச் சென்று, உண்மையான பணம் அல்லது பணப் பரிசுகளை வெல்லப் பணம் செலுத்தும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கிறது. இது முற்றிலும் எங்கள் கொள்கைகளை மீறுவதாக இருக்கிறது” என்று கூகுளின் தயாரிப்பு, ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றின் துணைத் தலைவரான சூசன் ஃப்ரே (Suzanne Frey) குறிப்பிடுகிறார்.

மேலும், "பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பதற்காகவே இந்தக் கொள்கைகள் எங்களிடம் உள்ளன. ஏதேனும் செயலி இந்தக் கொள்கைகளை மீறும் போது, அதனை அதன் டெவலப்பருக்கு அறிவித்து, அந்த டெவலப்பர் செயலியின் பயன்பாட்டை இணக்கமாகக் கொண்டுவரும் வரை அதன் பயன்பாட்டை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றுவோம்" என ஃப்ரே கூறுகிறார்.

“மீண்டும் மீண்டும் கொள்கை மீறல்கள் ஏற்பட்டால், குறிப்பிட்ட அந்த செயலியின் கூகுள் பிளே டெவலப்பர் கணக்குகளை நிறுத்துவது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். எங்களின் இந்தக் கொள்கைகள் அனைத்து டெவலப்பர்களுக்கும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன” என்றும் ஃப்ரே கூறியுள்ளார்.

பயனாளர்களை ஒரு செயலியிலிருந்து மற்றொரு செயலிக்கு மாற்றுவதற்கு அனுமதி இல்லை. சீன செயலிகளைப் பயன்பாட்டிலிருந்து நிரந்தரமாக அகற்றப்பட்டதற்கான காரணமும் இதுதான்.

கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் பேடிஎம்

எனினும் மீண்டும் சில மணி நேரங்களில் பிளே ஸ்டோரில் பே டிஎம் இடம் பிடித்தது. கூகுள் பிளே ஸ்டோர் தனது நடவடிக்கையை திரும்பப் பெற்றிருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Google Pay Paytm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment