நோக்கியா 8-ன் அறிமுகம் எப்போது?

அந்தநிறுவனத்தின் சீன இணையதளத்தில் நோக்கியா 8-ன் புகைப்படங்கள் சில கசிந்ததாகவும், பின்னர் அந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நோக்கியா 8 ஆகஸ்ட் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8 ஆகஸ்ட் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெயிகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை எச்.எம்.டி நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அந்தநிறுவனத்தின் சீன இணையதளத்தில் நோக்கியா 8-ன் புகைப்படங்கள் சில கசிந்ததாகவும், பின்னர் அந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தி வெர்ஜ் வெளியிட்டுள்ள தகவலின்படி, நோக்கியா 8-ன் அறிமுகம் லண்டனில் நடைபெற இருக்கிறது. Carl Zeiss Optics என்ற சிறம்பம்சம் கொண்ட கேமரா லென்ஸ் நோக்கியா 8-ல் பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக கேமராவிற்காக இந்த சிறம்பம்சத்தை பயன்படுத்தவிருப்பதாக நோக்கியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நோக்கியா 8-ன் காப்பர் கோல்டு நிறத்தில் உள்ள போனின் புகைப்படம் இணையதளத்தில் கசிந்தது. ஆனாலும், சில்வர் மற்றும் ப்ளூ ஆகிய நிறத்திலும் நோக்கியா-8 போன் வெளிவர இருக்கிறதாம். நோக்கியா 8 போனை பொறுத்தமட்டில், 5.3 இன்ச் Quad HD ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 ப்ராசஸர் கொண்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் கசிந்த புகைப்படத்தைக் கொண்டு பார்க்கும் போது, 13 எம்.பி + 13 எம்.பி என்ற டுயல் கேமரா அதில் இருக்கலாம். நோக்கியா 8 குறித்து பல்வேறு வதந்திகளும் வெளி வந்து கொண்டு தான் இருகின்றன. அதன்படி, பார்த்தோமேயானால் 4ஜி.பி ரேம், 63 ஜி.பி ஸ்டோரேஜ் ஆகிவற்றை கொண்டுள்ள நோக்கியா 8, ஆண்ட்ராய்டு 7.1-ல் வெளிவருவதாகவும் கூறப்படுகிறது.

வின்ஃபியூச்சர் தகவலின்படி, இந்த நோக்கியா 8-ன் விலை ரூ. 43,000-க்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

×Close
×Close