Advertisment

ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி?

Ration Card Update : ஸ்மார்ட் ரேஷன்கார்டு எப்படி பெறுவது மற்றும் புதிய ரேஷன்கார்டு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி?

How To Apply Smart Ration Card Online : இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்திற்கு ரேஷன் கார்டு இன்றியமையாத ஒரு ஆவணமாக உள்ளது. உங்கள் குடும்பத்தின் அடையாளம் என்று இரு வார்த்தைகளில் சொல்லிவிடலாம். அரசு கொடுக்கும் சலுகைகள், மற்றும் உணவு பொருட்களை பெறுவதற்கு மட்டுமல்லாது பல அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ரேஷன்கார்டு அடையான ஆவணமாக உதவுகிறது. முதலில் அட்டை வடிவில் வழங்கப்பட்ட இந்த ரேஷன்கார் தற்போது டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

அதன்படி அட்டை வடிவில் உள்ள அனைத்து ரேஷன்கார்டுகளும் ஸ்மார்ட்கார்டு வடிவில் டிஜிட்டல் அட்டையாக மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது புதிதாக வழங்கப்படும் ரேஷன்கார்டுகளும் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக குடும்ப அட்டைகளை டிஜிட்டல் மயமாக அச்சடிக்கும் பணியை தமிழக அரசு கடந்தவாரம் தொடங்கியது.  இந்த முறையில் பழைய ரேஷன்கார்டுகளும் புதிதாக டிஜிட்டல் முறையில் வழங்கப்பட உள்ளது.

இதில் தற்போது அரசின் சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும், ஆன்லைன் முறையில் சமர்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு வலைத்தளத்தில் (TNPDS Website) சென்று புதிய ரேஷன்கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன் முறையில் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு (TNPDS)வலைத்தளத்திற்கு சென்று "ஸ்மார்ட் கார்டு பயன்பாடு" (Smart Card Application) என்பதைக் கிளிக் செய்க

அடுத்து உங்கள் குடும்பத் தலைவர் மற்றும் முகவரி பற்றிய விவரங்களை உள்ளிட்டு, குடும்ப உறுப்பினர் மற்றும் அவர்களின் அடையாள அட்டை விவரங்களை உள்ளிடவும்.

அடுத்து  உங்கள் புகைப்படத்தை பதிவேற்றவும். இதில் உங்கள் புகைப்படம் 10KB அளவிற்குக் கீழ் இருக்க வேண்டும். மேலும் உங்கள் புகைப்படங்கள் png, gif, jpeg, jpg பார்மெட்டுகளில் இருக்க வேண்டும். 

இதனையடுத்து உங்கள் எல்பிஜி (LPG) கேஸ் விவரங்களை உள்ளிட்டு 

அடுத்து சப்மிட்(Submit) என்பதைக் கிளிக் செய்க. விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும், நீங்கள் குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள். இந்த குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட் கார்டின் நிலையை கண்காணிக்கலாம்.

ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை

வாக்காளர் அடையாள அட்டை

பான் கார்டு, 

சமீபத்திய புகைப்படம்

சாதி / பட்டியல் சான்றிதழ்

வருமான வரி சான்றிதழ்

மின் ரசீது

எரிவாயு நுகர்வோர் பில் (Gas Bill)

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ration Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment