Advertisment

வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்சனையா? இந்த 6 சிப்பிள் ஸ்டெப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க!

WhatsApp storage clear: வாட்ஸ்அப்பில் காலை வணக்கம் மெசேஜ், மீம்ஸ் போன்ற படங்களால் ஸ்டோரேஜ் அதிகமாகி இருக்கும். வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதபடி இருக்கும். இந்த 6 சிப்பிள் ஸ்டெப்ஸ் ட்ரை பண்ணி ஸ்டோரேஜ் கிளியர் செய்து கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WhatsApp

WhatsApp

வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பலர் தரப்பினரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் பலரும் பயன்படுத்துகின்றனர். அலுவலக பயன்பாடு, சொந்த பயன்பாடு எனப் பல்வேறு வகையில் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறோம். நம் உறவினர்கள், நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் தினமும் வாழ்த்து படங்கள், காலை வணக்கம், இரவு வணக்கம், மீம்ஸ் போன்ற படங்கள் அனுப்பி மகிழ்வோம். இதனால் பல சமயங்களில் ஸ்டோரேஜ் பிரச்சனை ஏற்படுகிறது. வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதபடி இருக்கும். இதற்கு ஸ்டோரேஜ் கிளியர் செய்ய வேண்டும்.

  1. வாட்ஸ்அப் ஓபன் செய்து ‘More options’ ஆப்ஷன் சென்று 'செட்டிங்ஸ்' பக்கம் செல்ல வேண்டும்.
  2. அதில், ‘Storage and data’ கிளிக் செய்யுங்கள். அடுத்து ‘Storage and data’ கொடுங்கள்.
  3. இப்போது அந்த பக்கத்தின் மேலே நீங்கள் அதிகம் பகிர்ந்த மெசேஜ் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு கீழ் ‘larger than 5 MB’ என்று ஆப்ஷன் இருக்கும்.
  4. அதை கிளிக் செய்யவும். இப்போது அதிலுள்ள வீடியோ, போட்டோஸ் செலக்ட் செய்து டெலிட் கொடுக்கவும்.
  5. உங்கள் தேவையானதை வைத்து விட்டு செலக்ட் செய்து டெலிட் கொடுக்கலாம் அல்லது delete all கொடுத்து மொத்தமாக டெலிட் செய்யலாம்.
  6. மறுபுறம் சேட் பக்கத்தில் search feature பயன்படுத்தியும் டெலிட் செய்யலாம். அதற்கு, chat section செல்லவும். போட்டோஸ், வீடியோஸ் இருக்கும். அதை செலக்ட் செய்து டெலிட் பட்டன் கொடுத்து டெலிட் செய்யலாம்.
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment