Advertisment

ரொம்ப சுலபம்ங்க..! ஃபேஸ்புக், யுடியூப் வீடியோ டவுன்லோடு சிம்பிள் ஸ்டெப்ஸ்

How to download facebook and youtube videos தொலைபேசி அல்லது டெஸ்க்டாப்பில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது என்பதற்கான வழிமுறைகளைக் கீழே பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How to download facebook and youtube videos

How to download facebook and youtube videos

How to download Facebook and Youtube Videos Tamil News : ஃபேஸ்புக்கில் வீடியோக்களைப் பார்க்க விரும்புகிறவர்கள் நிறையப் பேர் உள்ளனர். இருப்பினும், ஆஃப்லைனில் பார்ப்பதற்கான ஆப்ஷன் இல்லை. எனவே, ஃபேஸ்புக் பயனர்கள் வீடியோக்களைப் பதிவிறக்க மூன்றாம் தரப்பு பயன்பாட்டைத் தேட வேண்டும். மறுபுறம், யூடியூப் எந்த வீடியோவையும் பதிவிறக்கம் செய்து பயன்பாட்டிற்குள் பார்க்கும் ஆப்ஷனை வழங்குகிறது. இனி, தொலைபேசி அல்லது டெஸ்க்டாப்பில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது என்பதற்கான வழிமுறைகளைக் கீழே பார்க்கலாம்.

Advertisment

தொலைபேசி மற்றும் டெஸ்க்டாப்பில் ஃபேஸ்புக் வீடியோக்களை பதிவிறக்குவது எப்படி?

How to download facebook and youtube videos latest tech tamil news How to download facebook videos

ஸ்டெப் 1: உங்கள் சாதனத்தில் பதிவிறக்க விரும்பும் ஃபேஸ்புக் வீடியோவைத் திறக்கவும்.

ஸ்டெப் 2: உங்கள் தொலைபேசியில் இணைப்பைத் திறந்ததும், 'பகிர்' பட்டனை க்ளிக் செய்யவும். அங்கு 'கூடுதல் விருப்பங்கள்' என்பதற்குச் சென்று, 'நகலெடு' என்பதை அழுத்தவும். மாற்றாக, போஸ்ட்டின் மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை க்ளிக் செய்து இணைப்பை நகலெடுக்கவும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். 'டெஸ்க்டாப்பிலும், இதே வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

ஸ்டெப் 3: இப்போது, ஓர் பிரவுசரில் fbdown.net-ஐத் திறந்து, அந்தப் பெட்டியில் இணைப்பை இட்டு, பதிவிறக்கு என்பதைக் க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: ‘கூடுதல் விருப்பங்கள்’ என்பதை க்ளிக் செய்து, 'ஃபோர்ஸ் டவுன்லோட் எஸ்டி அல்லது எச்டி' என்ற ஆப்ஷனை அழுத்தவும். வீடியோ பின்னர் உங்கள் பதிவிறக்கங்கள் ஃபைல்களில் சேமிக்கப்படும்.

டெஸ்க்டாப்பில் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்குவது எப்படி?

ஸ்டெப் 1: யூடியூப் வீடியோவைப் பதிவிறக்குவதும் மிகவும் எளிது. முதலில் ‘en.savefrom.net‘ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.

ஸ்டெப் 2: அதனைத் திறந்ததும், உங்கள் லேப்டாப்பில் பதிவிறக்க விரும்பும் யூடியூப் வீடியோ இணைப்பை ஒட்டவும். ரெசல்யூஷனை மாற்றத் தளம் உங்களுக்குப் பல விருப்பங்களை வழங்குகிறது.

ஸ்டெப் 3: ரெசல்யூஷனைத் தேர்ந்தெடுத்த பிறகு, பதிவிறக்க பட்டனை க்ளிக் செய்யவும். பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோவை பதிவிறக்கங்கள் ஃபைல்களில் காண்பீர்கள்.

மொபைலில் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஸ்டெப் 1: உங்கள் மொபைல் தொலைபேசியில் யூடியூப் பயன்பாட்டைத் திறந்து வீடியோவைத் திறக்கவும்.

ஸ்டெப் 2: வீடியோவிற்குக் கீழே பதிவிறக்க விருப்பத்தைக் காண்பீர்கள். அந்த பதிவிறக்க பட்டனை க்ளிக் செய்தால் பதிவிறக்கம் தொடங்கும். பிறகு நீங்கள் யூடியூபின் நூலகப் பிரிவில் வீடியோவை ஆஃப்லைனில் காணலாம். இதற்கு, உங்களுக்கு இணையம் தேவையில்லை.

உங்கள் தொலைபேசியின் சேமிப்பகத்தில் வீடியோவைப் பார்க்க விரும்பினால், அதன் அதிகாரப்பூர்வ தளமான Snaptubeapp.com-யிலிருந்து Snaptube பயன்பாட்டைப் பதிவிறக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் அதை நிறுவியதும், நீங்கள் பதிவிறக்க விரும்பும் யூடியூப் வீடியோவைக் கண்டுபிடித்துப் பதிவிறக்க பட்டனை அழுத்தவும். படைப்பாளரின் அனுமதியைப் பெற்ற பின்னரே பயனர்கள் எந்த வீடியோவையும் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Youtube Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment