Advertisment

கூகுள் டிரைவ் அல்லது கூகுள் போட்டோக்களில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை எப்படி மீட்டெடுப்பது?

How to recover deleted photos from google drive or google photos Tamil News நீங்கள் கூகுள் ஒன் உறுப்பினராக இருந்தால், கூகுள் தயாரிப்புக்கு உதவி தேவைப்படும் போது நிறுவனத்தின் நிபுணர்களிடம் பேசலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How to recover deleted photos from google drive or google photos Tamil News

How to recover deleted photos from google drive or google photos Tamil News

How to recover deleted photos from google drive or google photos Tamil News : கூகுள் டிரைவ் அல்லது கூகுள் புகைப்படங்களில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டெடுக்க வேண்டுமா? கவலைப்பட வேண்டாம். நீங்கள் நீக்கிய புகைப்படங்கள், ஃபைல்கள் அல்லது வீடியோக்களை மீட்டெடுக்க கூகுள் உங்களை அனுமதிக்கிறது. இருப்பினும், நீங்கள் அவற்றை 30 அல்லது 60 நாட்களுக்கு முன்பு நீக்கிவிட்டால், நீங்கள் அவற்றை மீட்டெடுக்க முடியாது. அதைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

Advertisment

கூகுள் டிரைவிலிருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை எப்படி மீட்டெடுப்பது?

கூகுள் டிரைவின் மொபைல் அல்லது டெஸ்க்டாப் பதிப்பைப் பயன்படுத்தி நீங்கள் சமீபத்தில் எதையாவது நீக்கியிருந்தால், அந்த ஃபைலை நீங்களே மீட்டெடுக்க முடியும். நீங்கள் ஒரு ஃபைலை நீக்கும்போது, ​​கூகுள் ஒரு செய்தியைக் காண்பிக்கும். அதில், உங்கள் படம் 30 நாட்களுக்குப் பிறகு நிரந்தரமாக நீக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கும். எனவே, 30-நாள் நேர சாளரத்திற்கு முன் உங்கள் ட்ராஷிலிருந்து ஃபைல்களை மீட்டெடுக்கலாம். உங்கள் ட்ராஷை காலியாக்க அவற்றை நிரந்தரமாக நீக்கலாம்.

ஸ்டெப் 1: கூகுள் டிரைவ் செயலியைத் திறந்து 'ட்ராஷ்' கோப்புறைக்குச் செல்லவும்.

*மொபைலில், இடது மூலையில் உள்ள ஹாம்பர்கர் மெனுவை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் 'ட்ராஷ்' கோப்புறையைப் பார்ப்பீர்கள். கணினியில், நீங்கள் இங்கு செல்லலாம். மாற்றாக, கூகுளில் கூகுள் டிரைவ் ட்ராஷ் என்று தட்டச்சு செய்து, தேடல் நிறுவனத்திலிருந்து நீங்கள் பெறும் முதல் அதிகாரப்பூர்வ இணைப்பை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: ட்ராஷ் கோப்புறையில், நீங்கள் சமீபத்தில் நீக்கிய அனைத்து ஃபைல்களையும் காணலாம். அவற்றை மீட்டமைக்க, நீங்கள் கணினியில் உள்ள ஃபைலில் வலது கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, இரண்டு விருப்பங்களுடன் பாப் அப் ஆகும். அதாவது, மீட்டமை மற்றும் என்றென்றும் நீக்கு. மொபைல் பயனர்கள் மீட்பு பட்டனை பெற மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 3: கோப்பைஃபைலை மீட்டெடுக்க, நீங்கள் மீட்டமை விருப்பத்தை தேர்வு செய்யலாம். இது ஃபைலை அதன் அசல் இடத்திற்குத் திருப்பித் தரும்.

கூகுள், "நீங்கள் ஒரே நேரத்தில் பல ஃபைல்கள் அல்லது கோப்புறைகளை நீக்கினால், மீட்டெடுக்கலாம் அல்லது நிரந்தரமாக நீக்கினால், நீங்கள் மாற்றங்களைக் கவனிக்க நேரம் எடுக்கலாம்" என்று கூறுகிறது. கூகுள் டிரைவ் பயனர்கள் ஃபைலை மீட்டெடுக்க முடியாவிட்டால், அவர்கள் அதை திரும்பப் பெற வேண்டுமானால் ஒரு டிரைவ் நிபுணரையும் தொடர்பு கொள்ளலாம். பயனர்கள் நிறுவனத்தை அழைக்கலாம் அல்லது சாட் செய்யலாம். நீங்கள் கூகுள் ஒன் உறுப்பினராக இருந்தால், கூகுள் தயாரிப்புக்கு உதவி தேவைப்படும் போது நிறுவனத்தின் நிபுணர்களிடம் பேசலாம்.

கூகுள் புகைப்படங்களிலிருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை எப்படி மீட்டெடுப்பது?

கூகுள் புகைப்படங்கள் 60 நாள் நேர சாளரத்தை வழங்குகிறது. ஆனால், மீட்பு விருப்பம் உடனடியாகத் தெரியாது. எனவே நீங்கள் புகைப்படங்களை மீட்டெடுக்க விரும்பினால், கீழ்வரும் வழிமுறைகளை தொடர்ந்து படிக்கவும்.

ஸ்டெப் 1: உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட்டில், கூகுள் போட்டோஸ் ஆப்ஸைத் திறக்கவும்.

ஸ்டெப் 2: திரையின் அடிப்பகுதியில், ஒரு 'நூலகம்' டேப் உள்ளது, அதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: நீங்கள் மேலே 'ட்ராஷ்' கோப்புறையைக் காண்பீர்கள். நீங்கள் நீக்கிய அனைத்து புகைப்படங்களையும் பார்க்க அதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: நீங்கள் மீட்டெடுக்க விரும்பினால், புகைப்படம் அல்லது வீடியோவைத் தொட்டுப் பிடிக்கவும். அதன் பிறகு, மீட்டமை என்பதை க்ளிக் செய்யவும். புகைப்படம் அல்லது வீடியோ மீண்டும் வரும்.

ட்ராஷில் புகைப்படத்தை நீங்கள் காணவில்லை என்றால், நீங்கள் அதை 60 நாட்களுக்கு முன்பு அகற்றியிருக்க வேண்டும். அல்லது உங்கள் டிராஷை காலி செய்தீர்கள் என்று அர்த்தம். உங்கள் சாதனத்தின் கேலரி பயன்பாட்டிலிருந்து நிரந்தரமாக நீக்கியதற்கான வாய்ப்பும் உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Google Photos
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment