Advertisment

போலி மெயில்களை கண்டறிவது எப்படி? சில டிப்ஸ் இதோ

இமெயில் மூலம் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, உண்மையான மெயிலுக்கு போலி மெயிலுக்குமான வித்தியாசத்தை தெரிந்திருக்க வேண்டும். அதனை இதில் காணலாம்.

author-image
WebDesk
New Update
போலி மெயில்களை கண்டறிவது எப்படி? சில டிப்ஸ் இதோ

ட்விட்டர்,பேஸ்புக் உட்பட பிற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என கூறிக்கொண்டு தனிப்பட்ட நபர்களிடமிருந்து வரும் இமெயிலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய போலி மெயிலில் தவறான தகவல் இருக்கலாம் அல்லது பாஸ்வேர்டை ஹேக் செய்திட உங்களை ஆபத்தான தளத்திற்கு கொண்டு செல்வதற்கான லிங்க் இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisment

எனவே, இன்றைய ExpressBasics பதிப்பில், எந்த தளத்திலிருந்தும் உங்களுக்கு வந்த மின்னஞ்சல் உண்மையானதா என்பதை கண்டறியும் வழிகளை காணலாம். மோசடி கும்பல் போலி மெயில் மூலம் பணத்தை சுருட்டும் சம்பவமும் தற்போது அதிகரித்துள்ளது.

மெயிலை திறக்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை விளக்கி Google ஒரு சிறிய வீடியோவை உருவாக்கியுள்ளது. இது போலி இமெயில்கள் மத்தியில் ஒரிஜினலை கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும். அதனை கீழே காணலாம்

ட்விட்டர்

ட்விட்டர் நிறுவன மெயில்கள் @twitter.com அல்லது @e.twitter.com ஆகிய இரண்டு ஐடியிலிருந்து மட்டுமே வரக்கூடும். இந்த ஐடி இல்லாமல் தனி நபரிடமிருந்து ட்விட்டர் அதிகாரி என மெயில் வந்தால், அது நிச்சயம் போலியானதாக இருக்கும். இத்தகைய நிகழ்வில் மெயிலை அழிப்பது மட்டுமின்றி அனுப்பியவரையும் பிளாக் செய்ய வேண்டும். அத்தகைய மெயிலில் வரும் எந்த வித பைல்களையும் ஓப்பன் செய்யாதீர்கள். லிங்க்-களையும் கிளிக் செய்யாதீர்கள்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

ட்விட்டரை போலவே, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து வரும் மெயில்களும் @mail.instagram.com அல்லது @facebookmail.com ஆகிய ஐடியில் இருந்து மட்டுமே வரக்கூடும். வேறு எதாவது டொமைனிலிருந்து பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் அதிகாரி என தொடர்பு கொண்டால், அது நிச்சயம் பாதிப்பு தான். நீங்கள் தற்செயலாக ஓப்பன் செய்துவிட்டால், எந்த இணைப்புகளையும் கிளிக் செய்யக் கூடாது.

LinkedIn

LinkedIn நிறுவன மெயில்கள் linkedin@e.linkedin.com மற்றும் linkedin@el.linkedin.com ஆகிய இரண்டு டொமைனில் இருந்து மட்டும் தான் வரக்கூடும். மற்ற டொமைனிலிருந்து வந்தவை போலியாகும். லிங்க்ட்இனில் மோசடி செய்பவர்கள், பணம் கொடுத்தால் வேலை என சில தில்லுமுல்லுகளை செய்வது வழக்கம்.சில நேரங்களில் தீங்கிழைக்கும் பயன்பாடுகள் அல்லது மென்பொருளைப் பதிவிறக்க செய்ய கேட்கப்படலாம்.

மெயிலில் கவனிக்க வேண்டியவை

மின்னஞ்சலில் பெரும்பாலும் தனிப்பட்ட தகவல் தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

  • பயனர் பெயர், பாஸ்வேர்டு
  • சமூக பாதுகாப்பு நம்பர்
  • வங்கி நம்பர்
  • PIN நம்பர்
  • கிரெடிட் கார்டு நம்பர்

உங்கள் தாயின் இயற்பெயர் அல்லது அவர்களின் பிறந்த நாள் ஆகியவை முக்கிய விவரங்கள் கிடையாது என்றாலும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம் உங்கள் பாஸ்வேர்ட்டை மாற்றிட முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Technology Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment