/indian-express-tamil/media/media_files/2025/10/29/irctc-vikalp-2025-10-29-12-44-34.jpg)
பயணிகள் கவனத்திற்கு: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இனி கன்ஃபார்ம்; வந்தாச்சு ஐ.ஆர்.சி.டி.சி-யின் புதிய அம்சம்!
இந்திய ரயில்வேயின் டிக்கெட் புக்கிங் எளிமைப்படுத்தும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி. (இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்) ஒரு தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் "விகல்ப்" (Vikalp) அம்சம். இதில், காத்திருப்புப் பட்டியலில் (Waiting List) உள்ள டிக்கெட்டுகளை, அதே வழித்தடத்தில் செல்லும் மற்ற ரயில்களில் உள்ள காலி இருக்கைகளுக்கு தானாகவே (Automatically) மாற்ற, பயணிகளை அனுமதிக்கிறது.
'விகல்ப்' என்றால் என்ன?
விகல்ப் என்பது இலவச சேவை ஆகும். இதன் முக்கிய நோக்கம், ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படாத காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு, வேறொரு மாற்று ரயிலில் இருக்கை கிடைப்பதை உறுதி செய்வதாகும். நீங்க முதலில் புக்கிங் செய்த ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்குள் மாற்று ரயில் ஒதுக்கப்படும்.
ரிசர்வேஷன் அட்டவணை (Chart) தயாரானவுடன், கணினி அமைப்பானது காலியாக இருக்கும் இருக்கைகளைத் தேடுகிறது. காலி இருக்கை கிடைத்தால், புதிய ரயிலில் அந்தப் பயணிக்கு ஆட்டோமேட்டிக்காக இருக்கை ஒதுக்கப்படும்.
'விகல்ப்' அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
இந்த வசதியை டிக்கெட் புக்கிங் செய்யும்போதே தேர்வு செய்வது மிகவும் எளிது.
உங்களுடைய லாகின் விவரங்களைப் பயன்படுத்தி ஐ.ஆர்.சி.டி.சி. அப்ளிகேஷன் அல்லது வெப்சைட்-ஐ திறக்கவும்.
‘புக் டிக்கெட்’ (Book Ticket) ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, புறப்படும் மற்றும் சேரும் ரயில் நிலையம், பயணத் தேதி ஆகியவற்றை உள்ளிடவும்.
நீங்க பயணிக்க விரும்பும் ரயிலைத் தேர்ந்தெடுத்து, பயணி விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
நீங்க காத்திருப்புப் பட்டியலில் இருந்தால், டிக்கெட் கட்டணத்தைச் செலுத்தும் முன், 'விகல்ப்' ஆப்ஷனைத் தேர்வு செய்யும்படி அப்ளிகேஷன் உங்களுக்கு அறிவுறுத்தும்.
இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி, உங்களால் 7 மாற்று ரயில்கள் வரை தேர்ந்தெடுக்க முடியும்.
ரிசர்வேஷன் அட்டவணை தயாரான பிறகு, உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படாமல் இருந்தால், மாற்று ரயிலில் காலியாக உள்ள இருக்கை தானாகவே உங்களுக்கு ஒதுக்கப்படும். மாற்று ரயிலுக்கான புதிய பி.என்.ஆர். அடங்கிய ஒரு எஸ்.எம்.எஸ்., ரயில் புறப்படுவதற்கு முன் உங்களுக்கு வந்து சேரும்.
கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்:
விகல்ப் வசதி வரப்பிரசாதமாக இருந்தாலும், இதைப் பயன்படுத்துவதற்கு முன் சில நிபந்தனைகளைப் பயணிகள் மனதில் கொள்ள வேண்டும். விகல்ப் ஆப்ஷன் என்பது உங்களுக்கு சீட் உறுதிப்படுத்தும் சேவை கிடையாது. இது மாற்று வாய்ப்பை மட்டுமே வழங்குகிறது. மாற்று ரயிலில் இருக்கை நியமிக்கப்பட்ட பின், நீங்க வேறு ஒரு ரயில் நிலையத்திற்குச் சென்று ரயில் ஏற வேண்டிய நிலை ஏற்படலாம். மேலும், பயண விவரங்களை மாற்றம் செய்ய இயலாது.
விகல்ப் திட்டத்தின் மூலம் உங்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டால், நீங்க புதிய ரயிலில் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆரம்பத்தில் புக் செய்த முதல் ரயிலில் பயணிக்கக் கூடாது.
பணம் திரும்பப் பெறுதல் (Refund): மாற்று ரயிலுக்கான கட்டணம் குறைவாக இருந்தாலும், அதற்கான ரீஃபண்டை பயணிகள் பெற மாட்டார்கள். உறுதி செய்யப்பட்ட விகல்ப் டிக்கெட்டை நீங்க ரத்து செய்தால், அதற்கான ரத்துசெய்தல் கட்டணங்களைச் (Cancellation Charges) செலுத்த வேண்டும். மாற்று இருக்கை ஒதுக்கப்பட்ட ரயிலில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டால், டி.டி.ஆர். (Ticket Deposit Receipt) கிளைம் சமர்ப்பிப்பதன் மூலம் ரீஃபண்ட் கோரலாம். இந்த 'விகல்ப்' அம்சம், கடைசி நேரத்தில் பயணத் திட்டங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க உதவும் புத்திசாலித்தனமான தீர்வாகக் கருதப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us