Advertisment

ஹேக்கர்கள் உஷார்... இன்ஸ்டாவில் இந்த பாதுகாப்பு அம்சத்தை கவனித்தீர்களா?

How to use Two Factor Authentication ஒவ்வொரு முறையும் புதிய சாதனத்துடன் உள்நுழையும்படி கேட்கப்படுவீர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How to use Two Factor Authentication in Instagram for security Tamil News

How to use Two Factor Authentication in Instagram

How to use Two Factor Authentication in Instagram : இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமான புகைப்பட மற்றும் வீடியோ பகிர்வு பயன்பாடுகளில் ஒன்று. இந்த சமூக வலைத்தளத்தில் மக்கள் நிறையத் தனிப்பட்ட புகைப்படங்களைப் பதிவேற்றும்போது, கணக்கை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க two-factor அங்கீகாரத்தைப் பயன்படுத்துவது மிக முக்கியம். இது அவசியமான பாதுகாப்பு அம்சம். பெரும்பாலான சமூக ஊடக பயன்பாடுகள் பயனர்களுக்கு இதனை வழங்குகின்றன. two-factor அங்கீகாரத்தை அமைப்பது என்பது சிறப்பு உள்நுழைவு குறியீட்டைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒருவர் தங்கள் கணக்கில் உள்நுழைய முடியும் என்பதுதான். இன்ஸ்டாகிராமில் two-factor அங்கீகாரத்தை இயக்கியதும், நீங்கள் பாதுகாப்புக் குறியீடுகளைப் பெறுவீர்கள். ஒவ்வொரு முறையும் புதிய சாதனத்துடன் உள்நுழையும்படி கேட்கப்படுவீர்கள். இந்த பாதுகாப்பு அம்சத்தை நீங்கள் எவ்வாறு இயக்கலாம் என்பது பற்றி மேலும் அறியப் படிக்கவும்.

Advertisment

இன்ஸ்டாகிராமில் two-factor அங்கீகாரத்தை எவ்வாறு இயக்குவது

ஸ்டெப் 1: உங்கள் சாதனத்தில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டைத் திறந்து, கீழ் வலது மூலையில் அமைந்துள்ள ‘சுயவிவர ஐகானை’ க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: பிறகு நீங்கள் ஹாம்பர்கர் ஐகானை க்ளிக் செய்யவேண்டும். அதை நீங்கள் திரையின் மேல் வலது பக்கத்தில் காணலாம்.

ஸ்டெப் 3: இப்போது, அமைப்புகள் பகுதியைப் பார்வையிட்டுப் பாதுகாப்பு ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: இங்கே, நீங்கள் அழுத்த வேண்டிய Two-Factor அங்கீகார விருப்பத்தைக் காண்பீர்கள்.

ஸ்டெப் 5: ‘தொடங்கு’ என்பதை க்ளிக் செய்யவும். உங்கள் ஸ்மார்ட்போனில் டெக்ஸ்ட் செய்தி (எஸ்எம்எஸ்) குறியீடுகள் மற்றும் டூவோ மொபைல் அல்லது கூகுள் ஆதென்ட்டிக்கேட்டார் போன்ற மூன்றாம் தரப்பு அங்கீகார பயன்பாட்டின் மூலம் அங்கீகாரக் குறியீடுகள் பெறுவீர்கள்.

முதலாவது விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால், Google Authenticator போன்ற அங்கீகார பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். இது பல மொபைல் தளங்களுக்கு ஒரு முறை 6 இலக்க கடவுக்குறியீடுகளை வழங்குகிறது. உங்கள் ஸ்மார்ட்போனில் அனைத்து முக்கிய குறியீடுகளையும் சேமிக்கிறீர்களா அல்லது அதன் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் இது அமைக்கப்பட்டதும் அதே குறியீடுகளை மீண்டும் அணுக முடியாது. two-factor அங்கீகாரத்தை அமைத்த பிறகு, நீங்கள் உள்நுழையும்போதெல்லாம், Google Authenticator பயன்பாட்டின் மூலம் மறுபரிசீலனை செய்த அங்கீகார குறியீடுகளில் ஒன்றை உள்ளிட இன்ஸ்டாகிராம் உங்களைக் கேட்கும்.

இரண்டாவது விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால், அங்கீகார குறியீடுகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு முறையும் நீங்கள் உள்நுழைய முயற்சி செய்யும்போதும், எஸ்எம்எஸ் வழியாக அங்கீகாரக் குறியீட்டைப் பெறுவீர்கள். பின்னர் உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்நுழையலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Instagram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment