Advertisment

நான்கு கேமராக்களுடன் “ஹவாய் ஹானர் 9ஐ” (Huawei Honor 9i) ஸ்மார்ட்போன்... இந்தியாவில் அறிமுகம்!

நான்கு கேமராக்கள் என்ற சிறம்பம்சம் கொண்ட ஹவாய் ஹானர் 9ஐ (Huawei Honor 9i)ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Huawei, Huawei Honor, Smartphones, four cameras,

நான்கு கேமராக்கள் என்ற சிறம்பம்சம் கொண்ட ஹவாய் ஹானர் 9ஐ (Huawei Honor 9i)ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹவாய் ஹானர் 9ஐ (Huawei Honor 9i) ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வணிகதளமான பிளிப்கார்டில் பிரத்யேகமாக வெளிவரவுள்ள இந்த ஸ்மார்ட்போன், வரும் அக்டோபர் 14-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. பிரஸ்டிஜ் கோல்டு, அரோரா ப்ளூ மற்றும் கிராபைட் ப்ளாக் ஆகிய மூன்று நிறங்களில் இந்த ஹவாய் ஹானர் 9ஐ (Huawei Honor 9i) அசத்தலாக வெளிவரவுள்ளது.

Advertisment

இந்தியாவில் நான்கு கேமராக்கள் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஹவாய் ஹானர் 9ஐ (Huawei Honor 9i) தான் என்பது கவனிக்கத்தக்கது. உலகிலேயே முதல் முறையாக ஜியோனி நிறுவனத்தின் ஜியோனி எஸ்10 (Gionee S10) ஸ்மார்ட்போன் தான் 4 கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகமானது. நான்கு கேமரா சிறப்பம்சத்தை கொண்ட ஜியோனி எஸ்10 (Gionee S10) கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்புறம் இரண்டு கேமராக்களும், பின்புறம் இரண்டு கேமராவும் உள்ளன. அதில், பின்புற கேமராவை பொறுத்தவரையில் 16எம்.பி + 2 எம்.பி எனவும், 13எம்.பி + 2 எம்.பி என கேமராக்கள் உள்ளன. ஹவாய் ஹானர் 9ஐ (Huawei Honor 9i) ஸ்மார்ட்போன் 5.9 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்ப்வை(2160 x 1080 பிக்சல்ஸ்) கொண்டிருக்கிறது. ஹவாய் நிறுவனத்தின் ஆக்டோ-கோர் ஹைசிலிகான் கிரன் 659 ப்ராசஸரை (Octa-core Hisilicon Kirin 659 processor) கொண்டுள்ளது. 4 ஜி.பி ரேம் 64 ஜி.பி ரோம் உள்ள நிலையில், ஸ்ரோஜை மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி வரையிர்ல அதிகரித்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தில் இயங்கக்கூடிய இந்த ஹவாய் ஹானர் 9ஐ (Huawei Honor 9i) 3340 mAh பேட்டரி திறனை கொண்டிருக்கிறது. டுயல் சிம் பொருத்திக்கொள்ள முடியும் என்ற நிலையில், 4ஜி வோல்இ சப்போர்ட் செய்யக்கூடியது.

Huawei
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment