Advertisment

வெளியீட்டுக்கு தயாராகும் ஹூவாய் மேட்டின் 30 சீரியஸ் ஸ்மார்ட்போன்... சிறப்பம்சங்கள் என்னென்ன?

Huawei Mate 30 : சியோமி, ஒன்ப்ளஸ், சாம்சங் நிறுவனங்களின் ப்ரீமியம் போன்களுக்கு போட்டியாக நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Huawei Mate 30 series smartphone specifications, price, launch, availability and more

Huawei Mate 30 series smartphone specifications, price, launch, availability and more

Huawei Mate 30 series smartphone specifications, price, launch, availability : கடந்த ஆண்டு வெளியாகி அனைத்து வாடிக்கையாளர்கள் மனதையும் கவர்ந்த ஒரு ஸ்மார்ட்போன் என்றால் அது ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ஆகும். அந்த ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய மேட் 30 இந்த வருடம், செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது.

Advertisment

Huawei Mate 30 series smartphone specifications

கிரின் 990 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 40 எம்.பி. கேமரா சென்சார்கள் இதில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்ட் க்யூ இயங்கு தளத்தில் இந்த போன் இயங்கும்.  இது தவிர இதர சிறப்பம்சங்கள் குறித்த முழுமையான  தகவல்கள் தெரியவில்லை. ஆனால்  அடுத்த முறை வெளியாக இருக்கும் ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டுக்கு பதிலாக ஹார்மோனி ஓ.எஸ். கொண்டு இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் மற்றும் அமெரிக்காவின் புதிய கொள்கையின் காரணமாக புதிய ஓ.எஸ். உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : அறிமுகமானது சாம்சங்கின் கேலக்ஸி ஏ10எஸ். சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

இந்த ஓ.எஸ். தற்போதைக்கு ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட் டிஸ்பிளேக்கள், மற்றும் லேப்டாப்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது இந்த நிறுவனம்.  ஆப்பிள், எல்.ஜி., சியோமி, ஒன்ப்ளஸ், சாம்சங் நிறுவனங்களின் ப்ரீமியம் போன்களுக்கு போட்டியாக நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : டூகாட்டியின் டியாவெல் இந்தியாவில் அறிமுகம்

Huawei
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment