scorecardresearch

மகளுக்கு பரிசளித்த சென்னை வி.ஐ.பி… லேட்டஸ்ட் லம்போகினியில் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?

சென்னை விஜபி ஒருவர், காதலர் தினத்தன்று தனது மகளுக்கு Huracan EVO Fluo Capsule லம்போகினி காரை பரிசாக அளித்துள்ளார். சுமார் 7.5 கோடி மதிப்பிலான அந்த காரின் சிறப்பு அம்சங்கள் தெரியுமா?

லம்போகினி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான EVO Fluo Capsule மாடல் இந்தாண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது. இந்த மாடல், ஏற்கெனவே ஹூராகன் ஈவோ காரின் அப்டேட்டாக கருதப்படுகிறது.

இந்த காரின் முதல் யூனிட் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்துள்ளது. அதுவும் காலதன் தினத்தன்று, சென்னையில் உள்ள வாடிக்கையாளருக்கு டெலிவர் செய்ததாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 7.5 கோடி மதிப்பிலான அந்த காரை, காதலர் தினத்தில் தனது மகளுக்கு பரிசாக வழங்கியிருக்கிறார் அந்த சென்னை விஜபி.

சூப்பர்பாஸ்ட் கார்

இதில், சிசி 5,200 சிசி கொண்ட V10 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதன் பவர் 630 bhp ஆகும். அதாவது, இந்த கார் 2.9 விநாடிகளில் 100 கிலோமீட்டரை வேகத்தை எட்டிவிடும். இதன் வேகம் மணிக்கு சுமார் 325 கிமீ வரை இருக்கும் என லம்போகினி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வீல் ஸ்டீயரிங் கார்

இந்த காரில் சிறப்பு அம்சமாக பின்புற டையர்களுக்கு ஸ்டீயரிங் கன்ட்ரோல் உண்டு. முன் சக்கரங்களுக்கு எதிர்த் திசையில் சக்கரங்கள் திரும்புவதால், .5 மீட்டர் நீளம் கொண்ட இந்த காரின் டர்னிங் சர்க்கிள் குறைந்து, எளிதாக யூ-டர்ன் அடித்தி திரும்பிட முடியும்.

காரின் டிசைன் அமைப்பு

இந்த காரின் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் டிசைன் மாஸாக உள்ளது. பெரிய 20 இன்ச் அலாய் வீல்கள், முன் பக்க டிஃப்யூஸர், கறுப்பு நிற ரூஃப், பம்பர்,வீல்கள் என மற்ற மாடல்களை காட்டிலும் தனித்துவமாக காட்டிட Huracan EVO Fluo Capsule புதுமைகளை புகுத்தியுள்ளனர். முழு-கருப்பு உட்புறத்திலும், நிலையான வசதியான இருக்கைகளுக்கு பதிலாக புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஸ்போட்ஸ் இருக்கை விருப்பமான தேர்வாக இருக்கும். மேலும், சீட்களுக்கு உலகின் காஸ்ட்லியான லெதரான Alcantara-ஐ உபயோகித்துள்ளனர்.

5 கலரில் அறிமுகம்

பச்சை, ஆரஞ்ச், புளூ, மஞ்சள், சிவப்பு கலந்த ஆரஞ்ச் என்று மொத்தம் 5 கலர்களுக்கு தனித்தனி பெயரை சூட்டியுள்ளனர்.

பச்சை என்றால் Verde Shock,ஆரஞ்சுக்கு Arancio Livrea ,நீலத்திற்கு Celeste Fedra, மஞ்சளுக்கு Giallo Clarus என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை விஜபிக்கு வந்தது ஆரஞ்சு கலர் Arancio Livrea லம்போகினி கார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை 7.5 கோடியா?

Huracan EVO Fluo Capsule மாடலின் இந்திய விலை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், இந்தியாவில், அதன் முந்தைய மாடல்களான Lamborghini Huracan EVO RWD எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 3.2 கோடியாகவும், ஹுராகன் EVO AWD எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 3.8 கோடியாகவும் இருந்தது.

தற்போது, Fluo காப்ஸ்யூல் அதன் தனித்துவமான நிறங்கள், வசதிகள் காரணமாக பழைய மாடல்களை காட்டிலும் 20-25 சதவிகிதம் அதிகம் இருக்கும் என கணிக்கப்படுகிறது. அப்படி பார்கையில் சுமார் 3.72 கோடி ரூபாய் இருக்கும் என்றும், பின்னர் இறக்குமதி வரி; நுழைவு வரி என்பதை சேர்த்து கணக்கிட்டால் 7.5 கோடி வாங்கியிருக்கலாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Huracan evo fluo capsule in india is a father gift to daughter