Advertisment

ஜியோ 5ஜி புரட்சி: மோடி முன்னிலையில் முகேஷ் அம்பானி உறுதி

Jio to launch 5g in 2021 ஒவ்வொரு கிராமத்திலும் மூன்று ஆண்டுகளில் அதிவேக ஃபைபர் ஆப்டிக் டேட்டா இணைப்பு இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

author-image
WebDesk
New Update
IMC Meet 2020 Pm Modi meets Ambani Jio to launch 5g in 2021 Tamil News

Ambani says Jio to launch 5g in 2021

IMC 2020 PM Modi Ambani Meet Tamil News : மொபைல் உற்பத்தியில் பிரத்தியேக தளமாக இந்தியா வளர்ந்து வருகிறது எனப் பிரதமர் நரேந்திர மோடி 2020-ம் ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸில் (ஐஎம்சி) தனது தொடக்க உரையில் கூறினார். உலகில் மிகக் குறைந்த மொபைல் கட்டணத்தைக் கொண்ட இந்தியாவும் வேகமாக வளர்ந்து வரும் பயன்பாட்டுச் சந்தையில் ஒன்று தான் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஒவ்வொரு கிராமத்திலும் மூன்று ஆண்டுகளில் அதிவேக ஃபைபர் ஆப்டிக் டேட்டா இணைப்பு இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Advertisment

கோவிட்-19 வைரஸுக்கு எதிராக வெகுஜன தடுப்பூசிக்கு மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிட்ட அவர், "மொபைல் தொழில்நுட்பத்தின் உதவியுடன்தான் உலகின் மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தில் ஒன்றை நாம் தொடங்குவோம்" என்று கூறினார் மோடி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் ஐ.எம்.சி.யின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார். அவர், இந்தியாவில் 5 ஜி புரட்சியின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், 2021-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நாட்டில் முன்னோடியாக இருக்க ஜியோ உதவும் என்றும் கூறினார்.

"உலகின் சிறந்த டிஜிட்டல் இணைக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இன்று உள்ளது. இந்த முன்னிலையைப் பராமரிக்க, 5G-ன் ஆரம்ப வெளியீட்டை விரைவுபடுத்துவதற்கும், அதை மலிவாகவும் மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்வதற்கும் கொள்கை நடவடிக்கைகள் அவசியம். 2021-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் 5 ஜி புரட்சிக்கு ஜியோ முன்னோடியாக இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று அம்பானி தனது உரையில் கூறினார்.

நலிந்தவர்களுக்கு மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள் தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார். "2 ஜி சகாப்தத்தில், இந்தியாவில் 300 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் இன்னும் உள்ளனர். இந்த மக்களுக்கு மலிவு விலையில் ஸ்மார்ட்போன் இருப்பதை உறுதி செய்ய அவசர கொள்கை நடவடிக்கைகள் தேவை” என்றார்.

ஜியோவின் 5 ஜி நெட்வொர்க் “உள்நாட்டு நெட்வொர்க், வன்பொருள் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால்” இயக்கப்படும் என்றும், ஆத்மா நிர்பர் பாரதத்திற்கான பிரதமரின் பார்வைக்கு இது ஒரு சான்றாகும் என்றும் 5 ஜி இணைப்பு குறித்து அம்பானி கூறினார்.

"ஜியோ பிளாட்ஃபார்ம்கள், அதன் 20-க்கும் மேற்பட்ட தொடக்க பார்ட்னர்களை கொண்ட குடும்பத்துடன், செயற்கை நுண்ணறிவு, க்ளவுட் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா, இயந்திர கற்றல், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், பிளாக்செயின் போன்றவற்றில் உலகத் தரம் வாய்ந்த திறன்களை உருவாக்கியுள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்கட்டமைப்பு, நிதி சேவைகள் மற்றும் புதிய வர்த்தகம் போன்றவற்றுக்கும் தீர்வு கிடைக்கும். இந்த தீர்வுகள் ஒவ்வொன்றும், இந்தியாவில் நிரூபிக்கப்பட்டவுடன், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உலகின் பிற பகுதிகளுக்கு வழங்கப்படும்.

நாட்டில் டிஜிட்டல் வன்பொருள் தயாரிப்பதன் அவசியம் குறித்தும் அம்பானி குறிப்பிட்டார். ஒருவர் பெரிய அளவிலான இறக்குமதியைச் சார்ந்து இருக்க முடியாது. "பல முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் உற்பத்தி வசதிகளை அமைக்க இந்தியாவுக்கு வருகின்றன. சிப் வடிவமைப்பில் இந்தியா உலகத்தரம் வாய்ந்த பொருள்களை உருவாக்கியுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Narendra Modi Mukesh Ambani Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment