Advertisment

Instagram update: ஏழு கலக்கல் அம்சங்கள் அறிமுகம்… இன்ஸ்டா பயனர்கள் ஹேப்பி

இன்ஸ்டாகிராம் தனது மெசேஜிங் தளத்தில் புதிதாக ஏழு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் உலகம் முழுவதும் வரவுள்ள அந்த அம்சங்களின் ஸ்பெஷலை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Instagram update: ஏழு கலக்கல் அம்சங்கள் அறிமுகம்… இன்ஸ்டா பயனர்கள் ஹேப்பி

இன்ஸ்டாகிராம் தனது மெசேஜிங் தளத்தில் புதிதாக ஏழு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் உலகம் முழுவதும் வரவுள்ள அந்த அம்சங்களின் ஸ்பெஷலை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

Advertisment

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. ரீல்ஸ், ஸ்டோரீஸூக்கு புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம், வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், ஒரே நேரத்தில் ஏழு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி இன்ஸ்டா பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. அதில் முக்கிய அம்சமாக, இன்ஸ்டாவில் பிரவுஸ் செய்துக்கொண்டிருக்கும் அதே நேரத்திலே மெசேஜ் அனுப்பும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏழு புதிய வசதிகள் இதோ

Reply while you browse

புதிய அப்டேட் மூலம், ஹோம் ஃபீட் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, நமக்கு வரும் மெசேஜ்களுக்கும் ரிப்ளை செய்துகொள்ளலாம். முன்னதாக, நேரடி மெசேஜ் செய்திட ஹோம் ஃபீட்டில் இருந்து வெளியேறி, மெசேஜ் அனுப்பும் திரைக்கு செல்ல வேண்டும். எனவே, புதிய அப்டேட் பிரவசிங் செய்துக்கொண்டே மெசேஜ் அனுப்பிட உதவியாக இருக்கும். நாம் மெசேஜ்ஜிற்கு ரிப்ளை செய்யும்போது பேக்ரவுண்ட் அனைத்தும் பிளர் ஆகி விடும்.

Quickly send to friends

இந்த அப்டேட் மூலம், குறிப்பிட்ட பதிவை நண்பர்களுக்கு எளிதாக அனுப்பிட முடியும். அதற்கு, ஷேர் பட்டனை அழுத்தி பிடித்தால் , நாம் ஷேர் செய்ய வேண்டிய நபர்களின் ப்ரொப்லை திரையில் காட்டும். அதனை டேப் செய்தால் போதும்.

See Who's Online

இன்ஸ்டாகிராமில் நண்பர்களுடன் சேட் செய்வதற்கு ஏற்றவகையில் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை பார்த்திடமுடியும். இதை ஏற்கனவே சில பயனாளிகள் பார்த்திருக்கலாம்.

publive-image

Play, Pause and re-play

இன்ஸ்டாகிராம் ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக் மற்றும் ஸ்பாட்டிஃபை ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பு பணியில் உள்ளது. இதன் மூலம், இன்ஸ்டாகிராம் பயனர்கள் 30 நொடிகள் பிரிவீவ் உள்ள பாடல்களை நண்பர்களுடன் சேட்டில் ஷேர் செய்ய முடியும். உங்கள் நண்பர்கள், சாட் திரையிலே அதனை கேட்க முடியும்.

Send Messages Quietly

இரவு நேரத்தில் சவுண்ட் இல்லாமல் மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. @Silent என்ற வார்த்தையை மெசேஜ்ஜிற்கு முன் பயன்படுத்தினால் அவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் போல் சத்தம் வராமல் மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கும்.

Keep it on the lo-fi

இன்ஸ்கிராாம் உரையாடல் தனிப்பட்டது என்பது போல் உணர்வை ஏற்படுத்த, புதிதாக lo-fi தீம்மை அறிமுகப்படுத்தியுள்ளது.

Create a poll with friends

குரூப் சாட்டில் வாக்கெடுப்பை நடத்தும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாக்கெடுப்பு அம்சம் ஏற்கனவே, மெசேஞ்சர் செயலியில் இருந்தாலும், விரைவில் இன்ஸ்டா குரூப் சாட்டிற்கு வருகிறது.

இந்த அம்சங்கள் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்காக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Instagram Instagram Users
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment