Advertisment

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் க்ரியேட்டர்கள் விரைவில் பணம் சம்பாதிக்கலாம்!

Instagram may soon pay those who create reels நீங்கள் எந்த வகையான கணக்குகளை பார்க்கிறீர்கள் என்பதற்கான வெளிப்படைத்தன்மையை வழங்கும் புதிய முயற்சியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்

author-image
WebDesk
New Update
Instagram may soon pay those who create reels Tamil News

Instagram may soon pay those who create reels Tamil News

Instagram may soon pay those who create reels Tamil News : டிக்டாக் பதிலாகப் பயனர்களுக்கு ஒரு நல்ல மாற்றீட்டை வழங்க இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் அறிமுகப்படுத்தியது. இப்போது, ​​பயனர்கள் அதைப் பயன்படுத்தத் தொடங்க இன்னும் ஒரு காரணத்தை நிறுவனம் கொடுக்க விரும்புகிறது. பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த நிறுவனம் ஒரு “போனஸ்” அம்சத்தை செயல்படுத்தவுள்ளது. அதாவது, இனி படைப்பாளர்கள் ரீல்ஸ் செய்தால், பணம் சம்பாதிக்க அனுமதிக்கும்.

Advertisment

இந்த அம்சத்தை முதலில் டெவலப்பர் அலெஸாண்ட்ரோ பலுஸிதான் கண்டுபிடித்தார். இந்த டெவலப்பரால் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களில் ஒன்று, “போனஸ்” விருப்பம், படைப்பாளர்களுக்குக் கிடைக்குமே தவிர வழக்கமான பயனர்களுக்கு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. புதிய ரீலிஸ் பதிவேற்றும்போதெல்லாம் படைப்பாளர்களுக்குப் பணம் கிடைக்கும் என்றும் ஸ்கிரீன் ஷாட்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான அளவுகோல்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், நல்ல பதிவேற்ற அளவு அல்லது பார்வையாளர்களின் ஈடுபாட்டு அளவீடுகளைக் கொண்டவர்களுக்குப் பணமாக்குதல் (Monetisation) விருப்பத்தை அணுக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில "போனஸ் த்ரெஷோல்ட்ஸ்" இருக்கும், இது, பயனர்கள் தங்கள் ரீல்ஸிலிருந்து பணம் சம்பாதிக்க உதவும். மேலும் அந்த ஸ்கிரீன் ஷாட்கள், ஒருவர் சம்பாத்திய முன்னேற்றத்தையும் கண்காணிக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. இன்ஸ்டாகிராம் புதிய வருவாய் வாய்ப்புகளைச் சேர்த்துக் கொள்ளும். ஏனெனில், நிறுவனம் படைப்பாளர்களைக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறது.

இந்த அம்சம் செயல் வளர்ச்சியில் உள்ளது மற்றும் இன்ஸ்டாகிராம் அதன் இருப்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரீல்ஸ் பயனர்களுக்கு அவர்களின் செயல்திறன் குறித்து சிறந்த தெளிவை வழங்குவதற்காக சமீபத்தில் ஒரு புதிய “நுண்ணறிவு” அம்சம் சேர்க்கப்பட்டதால் நிறுவனம் விரைவில் இதை அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. இந்த அம்சம் ரீல்ஸ் மற்றும் லைவ் ரீல்ஸ்ஸிற்கு கிடைக்கிறது.

ரீல்ஸ் பொறுத்தவரை, வியூஸ், லைக்ஸ், கருத்துகள், சேவ் மற்றும் ஷேர் உள்ளிட்ட புதிய அளவீடுகளை இன்ஸ்டாகிராம் காண்பிக்கும். லைவிற்காக, பயனர்கள் அடைந்த கணக்குகள், உச்சிகால பார்வையாளர்கள், கருத்துகள் மற்றும் ஷேர் பற்றிய தரவைப் பெறுவார்கள். ஒரு கணக்கின் செயல்திறனை ரீல்ஸ் மற்றும் லைவ் எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதற்கான விரிவான படத்தை வழங்கக் கணக்கு நுண்ணறிவுகளில் (Account Insights) இந்த அளவீடுகளையும் நிறுவனம் உள்ளடக்கும்.

ஒரு படைப்பாளருக்கு இந்த அம்சம் சிறப்பாக செயல்பட, இன்ஸ்டாகிராமிலிருந்து போனஸைப் பெற வேண்டும். "உள்ளடக்கம் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதைப் பற்றி மேலும் புரிந்துகொள்வது முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, நீங்கள் எந்த வகையான கணக்குகளை பார்க்கிறீர்கள் என்பதற்கான வெளிப்படைத்தன்மையை வழங்கும் புதிய முயற்சியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Instagram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment