உங்களுக்கு அருகில் இருக்கும் யோகா பயிற்சிக் கூடம், பயிற்றுநர்களை கண்டறிய புதிய ஆப்... மத்திய அரசின் தூள் ஐடியா!

உலகத்தின் எந்த மூலையில் அமர்ந்து கொண்டும் உங்களுக்கான யோகா பயிற்றுநர்களை நீங்கள் கண்டறிந்து கொள்ளலாம். 

International Yoga Day 2019 : Yoga Locator App, Yoga Training centers, Yoga trainers near you : ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகெங்கும் ஆரோக்கியமான நோய்களற்ற வளமான வாழ்விற்கு ஆயுதமாக விளங்கும் யோகக் கலையை பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது ஆயுஷ் அமைச்சகம்.

யோகாவிற்கென பிரத்தேகமான அப்ளிகேசன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. யோகா லோக்கேட்டர் (Yoga Locator) என்ற அந்த செயலி மூலமாக நீங்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் யோகா பயிற்சி கூடங்கள் மற்றும் பயிற்றுநர்கள் பற்றிய முழுமையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். ஐ அடிப்படையாக கொண்உ உருவாக்கப்பட்ட இந்த செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றது. உலகத்தின் எந்த மூலையில் அமர்ந்து கொண்டும் உங்களுக்கான யோகா பயிற்றுநர்களை நீங்கள் கண்டறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : International Yoga Day 2019: 10 நாட்களில் தொப்பை குறைய ஒரே வழி.. இந்த யோகாசங்களை உடனே செய்ய ஸ்டார்ட் பண்ணுங்க!

முதலில் ஆப்பை டவுன் லோடு செய்து கொள்ளுங்கள். உங்களின் இடத்தினை அறிய லோகேசன் அக்சஸை அந்த ஆப்பிற்கு கொடுங்கள். உங்களுக்கு அருகில் இருக்கும் யோகா கூடங்கள், பயிற்றுநர்கள் குறித்த அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைக்கப்பெறும்.

யோகா ட்ரெய்னர், யோகா செண்டர், யோகா ஈவண்ட் என்று மூன்று ஆப்சன்களில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யவும். பின்பு உங்களுக்குத் தேவையான முழுமையான தகவல்கள் உங்களுக்கு கிடைத்துவிடும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close