Advertisment

iOS 15.4: மாஸ்க் அணிந்தபடி ஃபேஸ் ஐடி மூலம் அன்லாக் செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்

ஐபோன் யூசர்கள் தங்கள் ஐபோன்களில் உள்ள ஃபேஸ் ஐடியை மாஸ்க்குகளை அணிந்து கொண்டே பயன்படுத்தி அன்லாக் செய்யும் வசதி விரைவில் வரவுள்ளது.

author-image
WebDesk
New Update
iOS 15.4: மாஸ்க் அணிந்தபடி ஃபேஸ் ஐடி மூலம் அன்லாக் செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்

கொரோனாவால் அமலுக்கு வந்த மாஸ்க் கட்டாயம் உத்தரவு, ஐபோன் பயனாளிகளுக்கு சிறிது சிரமத்தை வழங்கியது. மாஸ்க் அணிந்திருப்பதால் முகம் பாதி மட்டுமே தெரிவதால், அதனை ஃபேஸ் ஐடி கண்டறிவது சிக்கலான ஒன்றாகும். அச்சமயத்தில், மாஸ்க் கழட்டியாக வேண்டும் அல்லது செல்போனில் பாஸ்வேர்ட் டைப் செய்தாக வேண்டும். மாஸ்க் அணிந்தப்படியே ஐபோனை அன்லாக் செய்திட, ஆப்பிள் வாட்ச் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இருந்தது.

Advertisment

இதுதொடர்பாக பல பயனாளிகள் கோரிக்கை விடுத்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் மாஸ்க் அணிந்திருந்தாலும் ஃபேஸ்ஐடியில் அன்லாக் செய்யும் வசதியை ஐஓஎஸ் 15.4 வெர்ஷனில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய 15.4 அப்டேட், விரைவில் அனைத்து ஐபோன் யூசர்களிடையே பயன்பாட்டிற்கு வரவுள்ளது. தற்போது, டெவலப்பர்கள் மற்றும் பொது பீட்டா வெர்ஷன் பயன்படுத்துவோருக்கு 15.4 அப்டேட் கிடைக்கிறது. இந்த அப்டேட் கிடைக்கும் பட்சத்தில், மாஸ்க் அணிந்தப்படி ஐபோனை அன்லாக் செய்திட ஆப்பிள் வாட்ச் தேவை இருக்காது.

மாஸ்க்குடன் ஃபேஸ் ஐடியை அன்லாக் செய்வது எப்படி?

ஐஓஎஸ் 15.4 வெர்ஷன் ஆனது பரந்த அளவிலான ஐபோன்களுக்கு வெளிவரும் என்றாலும் கூட, ஃபேஸ் ஐடி வித் ஏ மாஸ்க் அம்சமானது ஐபோன் 12 சீரீஸ் மற்றும் அதற்கு பிந்தைய மாடல்களில் மட்டுமே வேலை செய்யும் என தெரிகிறது. எனவே, உங்களிடம் புதுவித ஐபோன் மாடல் இருக்கும் பட்சத்தில், Public Beta செயலியை பதிவிறக்கம் செய்து, ஐபோனை அன்லாக் செய்யலாம்.

  • Step 1: முதலில் ஐபோனில் Settingக்கு செல்லுங்கள்
  • Step 2: அதில், Face ID and Passcode கிளிக் செய்யுங்கள்
  • Step 3: பின்னர் பாஸ்வேர்ட் டைப் செய்யுங்கள்
  • Step 4: Use Face ID with A mask-ஐ தேர்வு செய்யுங்கள்
  • Step 5: அடுத்து, மாஸ்க் அணிந்திருக்கும் உங்களது முகத்தை ஸ்கேன் செய்து, ஃபேஸ் ஐடி தயார் செய்யுங்கள்.

மாஸ்க்-வுடன் ஃபேஸ் ஐடியை ஸ்கேன் செய்கையில், ஒட்டுமொத்த முகத்தை செக் செய்யாமல், கண் பகுதியை மட்டும் ஸ்கேன் செய்து யூசரை உறுதிப்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, மாஸ்க்-வுடன் கூடிய ஃபேஸ் ஐடியானது, சன்கிளாஸுடன் வேலை செய்யாது. இது ஆப்பிள் பயனாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், கண்ணாடி அணிந்திருக்கும் போது ஃபேஸ் ஐடிஅன்லாக் செய்திட தனியாக விருப்பத்தை வழங்குகிறது.

அதற்கு Settings-க்கு சென்று, Face ID & Passcodeஐ கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து பாஸ்வேர்ட் பதிவிட்டு, Add Glassses தேர்ந்தெடுக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iphone Apple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment