Advertisment

Paytm-ன் புதிய அறிவிப்பு : கூடுதல் கட்டணம் இல்லாமல் இனி ரயில் டிக்கெட்

லைவ் பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் மற்றும் ரீஃபண்டுகள் பெறுவதற்கும் எளிய வழிமுறைகளை கொடுத்துள்ளது பே.டி.எம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC booking using paytm

IRCTC booking using paytm

IRCTC booking using paytm : பே.டி.எம். தற்போது இந்தியாவில் வளர்ந்து வரும் மிக முக்கியமான பண பரிவர்த்தனை செயலியாகும். இந்த செயலியின் மூலம் IRCTC வழியாக ட்ரெயின் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளும் வசதிகள் முன்பே ஏற்படுத்தப்பட்டிருந்தன.

Advertisment

ஆனால் பேமெண்ட் கேட்வே மற்றும் சர்வீஸ் சார்ஜ் போன்ற கட்டணங்கள் பயனாளிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.  சமீபத்தில் தன்னுடைய செயலியை அப்டேட் செய்திருக்கும் பே.டி.எம், ட்ரெய்ன் டிக்கெட் பதிவிற்கான அனைத்து கூடுதல் கட்டணங்களையும் தள்ளுபடி செய்திருக்கிறது. மேலும், இன்ஸ்டன் ரீஃபண்டிற்கும் ஏற்பாடு செய்திருக்கிறது.

அப்கிரேட் ஆன ஆப்பில் இனி பயனாளிகள் தங்களின் பி.என்.ஆர் ஸ்டேட்டஸையும் பார்த்துக் கொள்ளலாம்.

IRCTC booking using paytm benefits

இந்த மாற்றங்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை நீக்கியது குறித்து பே.டி.எம்மின் வைஸ் பிரசிடெண்ட் அபிசேக் ராஜன் கூறுகையில், இந்த நடவடிக்கைகள் முழுக்க முழுக்க பயணிகள், இணைய வர்த்தக சேவையை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும், எளிய முறையில் டிக்கெட் பதிவு செய்வதற்காகவும் எடுக்கப்பட்டது” என்று கூறினார்.

குறிப்பிட்ட இடங்களுக்கு தொடர்ந்து பயணம் செல்லும் பயணிகள், தங்களின் ப்ரீவியஸ் புக்கிங்குகளையே மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் தகவல்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த வருடம் மட்டும் சுமார் 38 மில்லியன் டிக்கெட்டுகளை பே.டி.எம். வழியே பதிவு செய்துள்ளனர் பயணிகள். பே.டி.எம். டிராவல் சேவைகளுக்காக மட்டுமே பெங்களூருவில் 300 பேர் கொண்ட குழு ஒன்று இயங்கி வருகிறது.

மேலும் படிக்க : சில்லாங்க் செல்ல ஒரு அரிய வாய்ப்பு - ஐ.ஆர்.சி.டி.சியின் புதிய பேக்கேஜ்

Irctc Paytm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment