ஜியோபோன்: சிங்கிள் சிம் அல்லது டுயல் சிம்?

ஹார்டுவேர் குறித்த தகவல்கள் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது, ஜியோபோன் சிங்கிள் சிம் பொருத்தக்கூடிய வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்

ஜியோபோன் சிங்கிள் சிம் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்தவாரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோபோன் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஜியோபோன் இலவசம் என்பதும், குறைந்த கட்டணத்தில் போன் பயன்பாட்டை பெறமுடியும் என்பதும் தான்.

ஜியோபோன் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதின் சிறம்பம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டன. ஆனால், அதில் உள்ள ஹார்டுவேர் குறித்த தகவல்கள் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஜியோபோன் சிங்கிள் சிம் பொருத்தக்கூடிய வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 15- முதல் ஜியோபோனின் சோதனை முறையில் வெளிவருகிறது என்றபோதிலும், ஜியோபோன் செம்டெம்பர் மாதத்திலேயே விற்பனைக்கு வரவுள்ளது. ஜியோபோனுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்குகிறது.

ஜியோபோன், 4ஜி வோல்ட்இ மட்டுமே சப்போர்ட் செய்யக்கூடியது. இந்தியாவில் 4ஜி வோல்ட்இ சேவையை ஜியோ மட்டுமே வழங்கி வருகிறது என்பதால், அதன்படி ஜியோ சிம் மட்டுமே ஜியோபோனில் பயன்படுத்த முடியும் என தெரியவருகிறது. இதனால், ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் பிஸ்என்எல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்திக்க நேரிடலாம்.

இந்தநிலையில், ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியில் இருக்கும் ஏர்டெல் விரைவில் 4ஜி வோல்ட்இ சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. எனினும், ஜியோ சிம் மட்டுமே பயன்படுத்தும் வகையில் ஜியோபோன் வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றன.

reliance-jiophone

ஜியோபோன் சிறம்பம்சங்கள்: 2.4 இன்ச் QVGA டிஸ்பிளே, மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட், டார்ச் லைட், எஃப்.எம் ரேடியோ, ஆல்ஃபா நியூமெரிக் கீபேடு ஆகிய சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. 22 மொழிகள், வாய்ஸ் கமாண்ட்-க்கு பதில் அளிக்கக்கூடியது. மேலும், போனில் இருந்து ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா ஆகிவற்றை திரையில் காணும் வகையில் ஜியோபோன் டிவி-கேபிளும் உள்ளது.

வெப் பிரவுசர், பேஸ்புக் போன்றவற்றை ஜியோபோனில் பயன்படுத்த முடியும் என்ற போதிலும், வாட்ஸ்அப்-யை பயன்படுத்தும் வசதி ஜியோபோனில் இல்லை.

ஜியோ அறிவித்துள்ள திட்டத்தின்படி, ரூ.153-க்கு மாதம் முழுக்க அன்லிமிடெட் டேட்டா(0.5 ஜி.பி நாள்தோறும்) மற்றும் கால்ஸை பெற முடியும். அதோடு, ஜியோவின் ஆப்ஸை-யும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல, ரூ.24(2 நாட்களுக்கு) ரூ.54(7-நாட்களுக்கு) போன்ற ப்ளான்களையும் ஜியோ அறிவித்தது.

ஏற்கெனவே, 12.5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஜியோ, தற்போது ஜியோபோன் மூலமாக மேலும் 10 கோடி வாடிக்கையாளர்களை கவர்திழுக்க திட்டமிட்டுள்ளது.

×Close
×Close