Advertisment

Jio: இதையும் விட்டு வைக்கலையா? என்ன புதுசுன்னு பாருங்க!

Jio tv plus price launch: இது பயனர்களுக்கு உண்மையிலேயே அர்த்தமுள்ள அதிசயமான அனுபவத்தை அளிக்க சிறந்த தரமான ரியாலிட்டி சேவைகளை வழங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jio: இதையும் விட்டு வைக்கலையா? என்ன புதுசுன்னு பாருங்க!

Jio tv plus price launch

Jio TV+ News In Tamil: ரிலையன்ஸ் புதன்கிழமை தனது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) 2020 இல் ஜியோ டிவி+ குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஜியோ டிவி+ என்பது ஒரு கண்டென்ட் திரட்டி என்று கூறலாம். அதாவது, ஆங்கிலத்தில் content aggregator என்பார்கள். இது (OTT) இயங்குதளங்கள், டிவி சேனல்கள், பல்வேறு பயன்பாடுகள் மற்றும் சேவைகளை அதன் ஜியோ செட்-டாப்-பாக்ஸ் பயனர்களுக்கு ஒன்றாகக் கொண்டுவருகிறது.

Advertisment

இந்த நிகழ்வின் போது ரிலையன்ஸ் ஆகாஷ் அம்பானி கூறுகையில், ஜியோ டிவி + User Interface (யுஐ) நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், சோனி எல்ஐவி போன்ற 12 முன்னணி உலகளாவிய OTT தளங்களை ஒன்றாகக் கொண்டு வருகிறது, மேலும் வாடிக்கையாளர்கள் நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் எளிதாக தேட முடியும் என்றார்.

புது போன் வந்தாச்சு… பட்ஜெட் ‘வெயிட்’தான்… வசதிகளைப் பாருங்க!

ஜியோ டிவி+ முக்கிய அம்சங்களில் ஒன்று, வெவ்வேறு ஆப்களில் தனித்தனியாக உள்நுழைவதற்கு பதிலாக ஒற்றை login மட்டும் போதும். குரல் தேடல் அமேசான் ஃபயர்ஸ்டிக்கின் அலெக்சா போன்றது. செட்-டாப்-பாக்ஸில் உள்ள ஜியோ ஆப் ஸ்டோரிலிருந்து பயனர்கள் வெவ்வேறு வகைகளில் இருந்து பல்வேறு ஆன்லைன் ஆப்ஸ்களை பெற முடியும் என்று ஜியோ குறிப்பிட்டுள்ளது. "ஜியோ டெவலப்பர்கள் திட்டத்தின் மூலம், எந்தவொரு ஆப் டெவலப்பரும் தங்கள் ஆப்களை உருவாக்கலாம், லான்ச் செய்யலாம் மற்றும் பணமாக்கலாம். ஜியோவுடன் கூட்டாளராக விரும்பும் டெவலப்பர்கள் https://developer.jio.com/ தளத்தை அணுகலாம் கூறினார்.

"பல தசாப்தங்களாக, டிவி கண்டென்ட் எந்தவொரு இன்டராக்ட் இல்லாத பெரும்பாலும் ஒளிபரப்பு சார்ந்த ஒன்றாகும். JioFiber உடன், நாங்கள் இந்த அனுபவத்தை மறுபரிசீலனை செய்து டிவியில் interactivity தன்மையைக் கொண்டு வந்துள்ளோம். செட் டாப் பாக்ஸில் உள்ள ஜியோ ஆப் ஸ்டோர் மூலம், பொழுதுபோக்கு, கல்வி, சுகாதாரம், சமையல், யோகா, கேமிங், மதம் மற்றும் பல வகைகளில் இணைய பயன்பாடுகளை ஒருவர் அணுக முடியும் ”என்று ரிலையன்ஸ் ஏஜிஎம் நிகழ்வில் ஆகாஷ் கூறினார்.

ஜியோ-வின் ‘மேட் இன் இந்தியா’ 5ஜி சேவை: முகேஷ் அம்பானி

ஜியோ டிவியின் தனித்துவமான interactive அம்சங்கள் குறித்தும் ஆகாஷ் பேசினார். எடுத்துக்காட்டாக, பயனர்கள் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்க அல்லது ரியாலிட்டி ஷோக்களில் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களிக்க முடியும். மேலும், சாதகமான வாக்குகளின் நிகழ்நேர ஒப்பீடு மற்றும் சதவீதம் திரையில் காண்பிக்கப்படும்.

ஜியோ டிவி+ உடன், ரிலையன்ஸ் தனது சமீபத்திய கண்டுபிடிப்பான ஜியோ கிளாஸையும் (Jio Glass) அறிமுகப்படுத்தியது. "ஜியோ கிளாஸ் தொழில்நுட்பத்தின் விளிம்பில் உள்ளது, இது பயனர்களுக்கு உண்மையிலேயே அர்த்தமுள்ள அதிசயமான அனுபவத்தை அளிக்க சிறந்த தரமான ரியாலிட்டி சேவைகளை வழங்குகிறது" என்று கிரண் தாமஸ் நிகழ்வில் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment