/indian-express-tamil/media/media_files/2025/10/29/lava-shark-2-2025-10-29-12-32-18.jpg)
வெறும் ரூ.6,999-க்கு 50MP கேமரா, 5000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்! மிரட்டல் பெர்ஃபார்மன்ஸ்!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இப்போது, முன்னணி உள்நாட்டு பிராண்டான லாவா, மீண்டும் ஒரு முறை பட்ஜெட் விலையில் பட்டையைக் கிளப்பும் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் லாவா ஷார்க் 2. வெறும் ரூ.6,999 என்ற நம்ப முடியாத விலையில் களமிறங்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன், இளைஞர்கள் மற்றும் ரீல்ஸ் உருவாக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களை (Content Creators) குறிவைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.
லாவா ஷார்க் 2-வின் வடிவமைப்புதான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. குறிப்பாக அதன் பெரிய கேமரா மாட்யூல், மென்மையான பிளைன் ஃபினிஷ், சற்று பிரீமியம் தோற்றத்துடன், சிலருக்கு ஐபோன் 16 ப்ரோ மாடலை நினைவுபடுத்துகிறது. பட்ஜெட் விலையிலும் ஒரு பிரம்மாண்டமான தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு விருந்தாகும். இந்த போன் 'Eclipse Grey' மற்றும் 'Aurora Gold' என 2 டிரெண்டியான வண்ணங்களில் கிடைக்கிறது.
ஷார்க் 2-ன் முக்கிய அம்சங்கள்
பின்புறத்தில் 50MP ஏ.ஐ. பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் அற்புதமான படங்கள் எடுக்கும் என லாவா உறுதியளிக்கிறது. முன்புறத்தில் தெளிவான செல்ஃபிகளுக்காக 8MP கேமரா உள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் ஏற்றவாறு ஏ.ஐ. இமேஜிங் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட Unisoc T7250 ஆக்டா-கோர் பிராசஸரில் இது இயங்குகிறது. இது தினசரி பயன்பாடு, கேமிங் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் என அனைத்திற்கும் சீரான செயல்திறனை உறுதி செய்கிறது.
4GB ரேம் உடன் கூடுதலாக 4GB விர்ச்சுவல் ரேம் வசதியும், 64GB இண்டர்னல் ஸ்டோரேஜும் உள்ளது. இதனை 2TB வரை விரிவாக்க முடியும். மிருதுவான காட்சிகளுக்காக, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பெரிய 6.75 இன்ச் HD+ LCD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் நீடிக்கும் பயன்பாட்டிற்காக 5000mAh பேட்டரி உள்ளது. இது USB டைப்-சி போர்ட் வழியாக 10W சார்ஜருடன் வருகிறது (18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது). சாதாரண தூசி மற்றும் நீர் தெறிப்புகளிலிருந்து பாதுகாக்கும் ஐ.பி-54 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன், எந்தவிதமான விளம்பரங்களோ அல்லது தேவையற்ற மென்பொருட்களோ (Bloatware) இல்லாத சுத்தமான ஆண்ட்ராய்டு 15 ஓ.எஸ்-ல் இயங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு. லாவா நிறுவனம் ஆண்ட்ராய்டு ஓ.எஸ் அப்கிரேட் மற்றும் 2 வருட பாதுகாப்பு பேட்ச் ஆதரவை உறுதி செய்துள்ளது.
இறுதியாக, வெறும் ரூ.6,999 விலையில் வரும் இந்த போனை வாங்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர்ஸ்டெப் சர்வீஸ் (வீட்டிற்கே வந்து சேவை) வசதியையும் லாவா வழங்குகிறது. மொத்தத்தில், குறைந்த விலையில் பிரீமியம் தோற்றம், நல்ல கேமரா மற்றும் உறுதியான செயல்திறன் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனைத் தேடுபவர்களுக்கு லாவா ஷார்க் 2 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us