Advertisment

Lunar Eclipse 2019 Date, Time: இந்தியாவில் சந்திர கிரகணம் எப்போது பார்க்கலாம்?

Lunar Eclipse July 2019 Date, Time in India: சந்திர கிரகணத்தை இந்தியாவில் எத்தனை மணிக்கு பார்க்க முடியும் என்பது குறித்தும், இதர சில முக்கிய தகவல்களையும் இங்கே பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lunar Eclipse 2019, Partial Lunar Eclipse 2019

Lunar Eclipse 2019, Partial Lunar Eclipse 2019

How to Watch Partial Lunar Eclipse on July 16–17, 2019: சந்திர கிரகணம் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலையில் (ஜூலை 16 - 17) தோன்றுகிறது. இந்தியாவிலும், மற்ற சில நாடுகளிலும் இதனை வெறும் கண்ணால் பார்க்க முடியும். இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பகுதி, அட்லாண்டிக் பகுதி, இந்தியன் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் காண முடியும். இந்தியாவில் இதனை எத்தனை மணிக்கு பார்க்க முடியும் என்பது குறித்தும், இதர சில முக்கிய தகவல்களையும் இங்கே பார்ப்போம்.

Advertisment

சூரியன், பூமி, சந்திரன் என இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்கிறோம். சூரியின் வெளிச்சம் இல்லாததால் அந்த நேரத்தில் நிலவு தெரியாது.

Lunar Eclipse Today- சந்திர கிரகணம் Lunar Eclipse Today- சந்திர கிரகணம்

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி தோன்றியது. இந்நிலையில், தற்போது அதே போன்று நாளையும் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் நாளை அதிகாலை சரியாக 1.32 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி, அதிகாலை 3:01 மணிக்கு உச்சம் அடைந்து, காலை 4.30 மணிக்கு முடிகிறது. ஒட்டு மொத்தமாக சுமார் 5 மணி நேரம் வரையில் சந்திரகிரகண காலம் உள்ளது.

Lunar Eclipse 2019: சந்திர கிரகணம்- சிலிர்ப்பான சுவாரசியங்கள்

இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பகுதி, அட்லாண்டிக் பகுதி, இந்தியன் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் காண முடியும்.

இன்று சந்திர கிரகணம்...11 மணி நேரம் மூடப்படும் கோயில்கள் முழு விபரம்!

இந்த சந்திர கிரகணம் குறித்து பிரபல ஜோதிட வல்லுநர்கள் கூறுகையில், "கிரகணம் தொடங்குவதற்கு சுமார் ஒன்பது மணி நேரத்துக்கு முன்பாகவே நாம் உணவு உண்டுவிட வேண்டும். அதற்குப் பிறகு கிரகணம் முடியும்வரை எதுவும் சாப்பிடக்கூடாது. முதியவர்கள், குழந்தைகள், கருவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த விஷயத்தில் விலக்கு உண்டு.

மேலும் படிக்க : இஸ்ரோவின் பாகுபலியில் என்ன பிரச்சனை? தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படவில்லை சந்திரயான் 2  

மற்றவர்கள் கிரகணம் தொடங்குவதற்கு ஒன்பது மணி நேரத்துக்கு முன்பு சாப்பிடவேண்டும் என்றால், இவர்கள் மூன்று அல்லது இரண்டு மணிநேரத்துக்கு முன்பு உணவு எடுத்துக்கொள்ளலாம்" என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Lunar Eclipse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment