Advertisment

Realme 6i vs Redmi Note 9: புதிய பட்ஜெட் போன்களில் எதை வாங்கலாம்?

Realme 6i vs Redmi Note 9: இரு சாதனங்களும் அவைகள் எடுத்த படங்களை எவ்வாறு செயலாக்குகின்றன என்பதன் அடிப்படையில் செயல்திறன் வேறுபடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Realme 6i vs Redmi Note 9: புதிய பட்ஜெட் போன்களில் எதை வாங்கலாம்?

Realme 6i vs Redmi Note 9

Mobile Phone News In Tamil: ஓரளவுக்கு நடுத்தர வர்க்கத்தினராலும் வாங்கக் கூடிய விலை என்பதால், Realme மொபைல் நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ மொபைலுக்கு பிறகு, அந்நிறுவனம் ரியல்மி 6i மாடலை அறிமுகம் செய்துள்ளது. Xiaomiயின் Redmi Note 9 மாடலுக்கு போட்டியாக ரியல்மி 6i வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

Realme 6i vs Redmi Note 9: இந்தியாவில் விலை

ரெட்மி நோட் 9 விலை 4 ஜிபி ரேம் / 64 ஜிபி ஸ்டோரேஜ் மொபைல் விலை ரூ .11,999

4 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் மொபைல் விலை ரூ .13,499

6 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் மொபைல் விலை ரூ .14,999

அக்வா கிரீன், ஆர்க்டிக் ஒயிட் மற்றும் பெப்பிள் கிரே வண்ணங்களில் மொபைல் கிடைக்கிறது. ஜூலை 24 முதல் அமேசான், மி.காம், மி ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் மி பார்ட்னர் ஸ்டோர்ஸ் மூலம் இது கிடைக்கிறது.

ரியல்மி 6i, 4 ஜிபி ரேம் / 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மொபைல் விலை ரூ .12,999

6 ஜிபி ரேம் / 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்மொ பைல் விலை ரூ .14,999

இது ஜூலை 31 முதல் ரியல்மே.காம், பிளிப்கார்ட்டில் கிடைக்கும்.

Lunar White and Eclipse Black வண்ணங்களில் மொபைல் கிடைக்கிறது.

Realme 6i vs Redmi Note 9: வடிவமைப்பு

ரியல்மி 6i மற்றும் ரெட்மி நோட் 9 இரண்டும் வித்தியாசமாக இருக்கின்றன. ரியல்மி 6i vertically aligned quad camera setup குவாட் கேமரா அமைப்பைக் கொண்ட ஒரு பிளாஸ்டிக் body உருவாக்கமாகும். ரெட்மி நோட் 9 நிறுவனத்தின் சொந்த Aura Balance design கொண்டுள்ளது. பின்புறத்தில் செவ்வக குவாட்-கேமரா module வருகிறது. ரெட்மி நோட் 9 கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் கண்ணாடியைக் கொண்டுள்ளது.

Mobile Phone News In Tamil Realme 6i vs Redmi Note 9 Price Features- மொபைல் போன் ரெட்மி நோட் 9 vs ரியல்மி 6 ஐ Mobile Phone Realme 6i

இரண்டு சாதனங்களும் முன்பக்கத்திலிருந்து ஒத்ததாக இருக்கும். இரண்டுமே large hole punch display கொண்டுள்ளன. ரியல்மி 6i பவர்பட்டன் பதிக்கப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது, அதேசமயம், ரெட்மி நோட் 9 கேமரா moduleக்குக் கீழே, பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

Realme 6i vs Redmi Note 9: டிஸ்பிளே

ரியல்மி 6i, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 6.5 அங்குல முழு எச்டி + டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ரெட்மி நோட் 9 கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 6.53 அங்குல முழு எச்டி + டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இரண்டு சாதனங்களும் எல்சிடி டிஸ்ப்ளேக்களுடன் வருகின்றன, அவை ஒத்ததாக இருக்கும். இருப்பினும், ரியல்மி 90 Hz refresh rate சேர்த்துள்ளதால் இங்கு ஒரு நன்மை உண்டு, அதேசமயம், சியோமி இன்னும் 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துகிறது, இதன் காரணமாக ரியல்மி 6i இன் காட்சி மென்மையாக இருக்கும்.

Realme 6i vs Redmi note 9: பிராசஸர் மற்றும் UI

ரெட்மி நோட் 9 மீடியா டெக் ஹீலியோ ஜி 85 processor மூலம் இயக்கப்படுகிறது, இது மிகச் சிறப்பாக செயல்படுகிறது. இருப்பினும், ரியல்மி 6i மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி processor கொண்டு வருவதன் மூலம் ஒரு படி மேலே செல்கிறது. ரெட்மி நோட் 8 ப்ரோ மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி செயலி மூலம் இயக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. ரியல்மீ 6i ரெட்மி நோட் 9 ஐ விட சிறப்பாக செயல்படும்.

Mobile Phone News In Tamil Realme 6i vs Redmi Note 9 Price Features- மொபைல் போன் ரெட்மி நோட் 9 vs ரியல்மி 6 ஐ Redmi Note 9 Price, Features

இருப்பினும், செயல்திறன் என்பது என்ன processor பயன்படுத்தப்படுகிறது என்பது மட்டுமல்ல. அதற்கு பதிலாக, சாதனங்களை சீராக இயக்க மென்பொருளுக்கு எத்தனை மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன என்பதும் அடங்கும். ரியல்மி 6i ரியல்மி UI ஐ இயக்குகிறது, ரெட்மி நோட் 9 MIUI 11 ஐ இயக்குகிறது.

Realme 6i vs Redmi note 9: கேமராக்கள்

இரண்டு சாதனங்களும் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. ரியல்மி 6i 48MP முதன்மை சென்சார் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பி எடுப்பதற்கு ஒற்றை 16 எம்.பி சென்சார் கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 9, 48 எம்.பி பிரைமரி சென்சார், 8 எம்.பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், 2 எம்.பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்.பி டெப்த் சென்சார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், இது செல்ஃபி எடுக்க 13MP சென்சார் கொண்டுள்ளது.

publive-image

இரு சாதனங்களும் அவைகள் எடுத்த படங்களை எவ்வாறு செயலாக்குகின்றன என்பதன் அடிப்படையில் செயல்திறன் வேறுபடும்.

Realme 6i vs Redmi note 9: பேட்டரி

ரெட்மி நோட் 9, 5,020 எம்ஏஎச் பேட்டரி மூலம் 9W ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன்செயல்படுகிறது. மொபைலுடன் 22.5W வேகமான சார்ஜர் வழங்கப்படுகிறது. அதேசமயம், நிறுவனத்தின் சொந்த 30W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் சிறிய 4,300 mAh பேட்டரி மூலம் Realme 6i சப்போர்ட் செய்யப்படுகிறது. ரியல்மி 6i 20W வேகமான சார்ஜரை உள்ளடக்கியது. தேவைப்பட்டால் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 30W சார்ஜரை வாங்க வேண்டும்.

Redmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment