Advertisment

ரூ5000 விலையில் அழகிய புத்தம்புது ஸ்மார்ட்போன்கள்: இதை ஏன் மிஸ் பண்றீங்க?

Mobile phones under RS 5000: முன்னணி நிறுவனங்களே 5000 ரூபாய்க்கும் குறைவான விலையில் மொபைல் போன்களை அறிமுகம் செய்திருக்கின்றன. அதன் விவரங்களை இங்கு காணலாம்.

author-image
WebDesk
New Update
Smartphones, micromax, coolpad, Itel, budget smartphones, smartphones under 5000, ikall k110 redmi go micromax canvas spark micromax bharat 2 plus coolpad mega 5m itel a235

Mobile phone tamil news

Mobile phones under RS 5000: மொபைல் போன்கள் அவசியமானவை. புதுப்புது போன்கள் அறிமுகம் ஆவதால், பலரும் போன்களை அவ்வப்போது மாற்றும் ஆர்வத்திலும் இருக்கிறார்கள். அடிக்கடி போன்களை மாற்றுகிறவர்கள் குறைந்த தொகையில் உள்ள செல்போன்களை விரும்புவார்கள். முன்னணி நிறுவனங்களே 5000 ரூபாய்க்கும் குறைவான விலையில் மொபைல் போன்களை அறிமுகம் செய்திருக்கின்றன. அதன் விவரங்களை இங்கு காணலாம்.

Advertisment

போன்கள் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த நிலையில், இன்று அந்த போன்கள் ஸ்மார்ட்போன்களாக மாறி, கம்ப்யூட்டர் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்துவிடுகிறது. இத்தகைய பணிகளை செய்ய ஸ்மார்ட்போன்களுக்கு திறன்மிகு புராசசர், மல்டிபிள் கேமராக்கள், பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய அதிநவீன ஸ்மார்ட்போன்கள் இல்லாவிட்டாலும், தற்போது அனைவரது கையிலும் ஒரு பேசிக் மாடலிலான ஸ்மார்ட்போன்கள் இருக்கவே செய்கின்றன. சிலர் இத்தகைய ஸ்மார்ட்போன்களை வாங்கி, பின் அவர்கள் அதனை தங்கள் வசதி மற்றும் உபயோகத்திற்கு ஏற்றவாறு அப்டேட் செய்துகொள்கின்றனர்.

Mobile phones under RS 5000: ரூ5000 விலையில் மொபைல் போன்கள்

வெகுசிலரோ, போட்டோ எடுக்கவும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளை பார்க்க மட்டும் குறைந்த பட்ஜெட்டிலான ஸ்மார்ட்போன்களை விரும்புகின்றனர். அந்த பிரிவு மக்களுக்காகே இந்த கட்டுரை

குறைந்த பட்ஜெட்டில் ஆளை அசத்தும் வகையிலான ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ..

Redmi Go

சீன நிறுவனமான ஜியோமியின் Redmi Go பிராண்ட் 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ.2,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 இஞ்ச் 720p டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் புராசசர், 1 ஜிபி ராம், 32 ஜிபி ஸ்டோரேஜ் (238 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளும் வசதி. ஆண்ட்ராய்ட் ஓரியோ கோ எடிசன் ஆபரேடிங் சிஸ்டம். தமிழ், இந்தி, பெங்காலி, குஜராத்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட 7 மொழிகளில் தகவல்கள். 8 எம்பி பின்புற கேமரா, 5 எம்பி செல்பி கேமரா. 3000 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி, 10 நாட்கள் ஸ்டாண்ட்பை வசதியுடன் கிடைக்கிறது.

 

publive-image

iKall K110

இன்றைய நவநாகரீக ஸ்மார்ட்போன்களை ஒத்தது இந்த iKall K110 போன். வாட்டர்டிராப் ஸ்டைல் நாட்சுகளுடனும், திக் பெசல்கள் மேற்புறம் மற்றும் கீழ்ப்பக்க பகுதியில் அமைந்துள்ளன. 2 எம்பி செல்பி கேமரா, மேற்பக்க வலதுபுறத்தில் உள்ளது. பின்பக்கத்தில் 5 எம்பி கேமரா உள்ளது. நான்கு கேமரா டிசைன் இருப்பினும், 1 மட்டும் செயல்படும் வகையிலும், மற்ற 3 அழகுக்காக வைக்கப்பட்டுள்ளன. 5.5 இஞ்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வித் 480 x 960 பிக்சல்ஸ் ரெசலுசன். 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் புராசசர், ஆண்ட்ராய்ட் 6 ஓஎஸ், 2 ஜிபி ராம், 16 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ( 128 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளும் வசதி), 2500 மெகாஹெர்ட்ஸ் பேட்டரியுடன் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ. 4,899 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

publive-image

Micromax Canvas Spark

இந்திய நிறுவனமான மைக்ரோமாக்ஸ், 2016ம் ஆண்டில் கேன்வாஸ் ஸ்பார்க் போனை அறிமுகப்படுத்தியது. 1 ஜிபி ராம், 8 ஜிபி ஸ்டோரேஜ் (32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி). 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் புராசசர், ஆண்ட்ராய்ட் 6.0 ஆபரேடிங் சிஸ்டம். 2000 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி. 2 மற்றும் எம்பி கேமராக்கள் கொண்ட இந்த போனின் விலை ரூ.4,499 ஆக உள்ளது.

 

publive-image

Micromax Bharat 2 Plus

Micromax Bharat 2 Plus போன் இந்த பட்டியலிலேயே மிகச்சிறிய ஸ்மார்ட்போன் ஆகும். 4 இஞ்ச் WVGA display மற்றும் 480 x 800 பிக்சல்ஸ் ரெசலுசன் கொண்டது. 1 ஜிபி ராம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. 1.3 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் புராசசர், 5 எம்பி பின்பக்க கேமரா 2 எம்பி முன்பக்க கேமரா உள்ளது. 1600 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி. 2017ம் ஆண்டில் அறிமுகமான இந்த போனின் விலை ரூ.2,950 ஆக உள்ளது.

 

publive-image

Coolpad Mega 5M

Coolpad Mega 5M போன் 2018ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.4,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த போனில் 5 இஞ்ச் ஹெச்டி டிஸ்பிளே, ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் புராசசர், இந்த போனில் பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது இதன் தனிச்சிறப்பு ஆகும். 1 ஜிபி ராம், 16 ஜிபி ஸ்டோரேஜ் (32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி), 2000 மெகா ஹெர்ட்ஸ் பேட்டி, 5 எம்பி பின்பக்க கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா உள்ளது.

 

publive-image

Itel A23

2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போனில் 5 இஞ்ச் FWVGA display (854 x 480 pixels) உடன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் புராசசர் உள்ளது. 2 எம்பி பிரைமரி கேமராவும், 0.3 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. 1 ஜிபி ராம், 8 ஸ்டோரேஜ் (32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி), ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியா ஆபரேடிங் சிஸ்டம், 2,050 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி உள்ள இந்த போனின் விலை ரூ.4,999 ஆக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Smartphone Micromax
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment