Advertisment

மோட்டோரோலா வழங்கும் புத்தம் புதிய மோட்டோ G200 5G அறிமுகம் : விலை, விவரக்குறிப்புகள்

Motorola launches Moto G200 5G with snapdragon 888 soc price-specifications Tamil News மேலும், மோட்டோரோலாவின் சமீபத்திய எட்ஜ் 20 சீரிஸ் போன்களில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும்.

author-image
WebDesk
New Update
Motorola launches Moto G200 5G with snapdragon 888 soc price-specifications Tamil News

Motorola launches Moto G200 5G with snapdragon 888 soc price-specifications Tamil News

Motorola launches Moto G200 5G with snapdragon 888 soc price-specifications Tamil News : மோட்டோரோலா தனது பிரீமியம் ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது Qualcomm Snapdragon 888+ செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் ஒரு பெரிய காட்சியைக் கொண்டுள்ளது. வேகமாக சார்ஜிங், வாட்டர் ரெசிஸ்டென்ட் மதிப்பீடு மற்றும் பிற அம்சங்களுக்கான ஆதரவுடன் இந்த சாதனம் பெரிய பேட்டரியைக் கொண்டுள்ளது. Moto G200 5G-ன் விவரக்குறிப்புகள் மற்றும் விலையை இங்கே பார்க்கலாம்.

Advertisment

மோட்டோ G200: விலை

ஐரோப்பாவில், புதிய மோட்டோ G200-ன் விலை EUR 449. அதாவது இது இந்தியாவில் தோராயமாக ரூ.37,800 விலைக்குக் கிடைக்கும். இது சில வாரங்களில் வாங்குவதற்குக் கிடைக்கும். இது லத்தீன் அமெரிக்காவிலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கிளேசியர் கிரீன் மற்றும் ஸ்டெல்லர் ப்ளூ உள்ளிட்ட இரண்டு வெவ்வேறு வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

மோட்டோ G200 அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ G200, 144Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் 6.8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. தற்போது, ​​Lenovo Legion Phone Duel 2, Asus ROG Phone 5 மற்றும் Black Shark 4 சீரிஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் 144Hz டிஸ்ப்ளேவை வழங்குகின்றன. அதன் பேனல் முழு HD+ காட்சியில் இயங்குகிறது.

மோட்டோ G200, LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் AMOLED பேனல் இதில் இல்லை. மேலும், மோட்டோரோலாவின் சமீபத்திய எட்ஜ் 20 சீரிஸ் போன்களில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். இது HDR10 மற்றும் DCI-P3 வண்ண வரம்பு கவரேஜையும் கொண்டுள்ளது.

ஹூட்டின் கீழ், Qualcomm Snapdragon 888+ ப்ராசசர் உள்ளது. இது, 8GB LPDDR5 RAM மற்றும் 256GB UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 11 OS உடன் வெளிவருகிறது.

மோட்டோரோலா மோட்டோ G20, பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. இந்த அமைப்பில் 108MP முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP டெப்த் கேமரா சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 16MP செல்ஃபி கேமரா உள்ளது. ஃபோனுக்குள் 5,000mAh பேட்டரியை நிறுவனம் சேர்த்துள்ளது.

இது, 33W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. மேலும், இதில் matte finish கொண்ட ஒரு பிளாஸ்டிக் பின் பேனல் உள்ளது. இது தவிர, இது IP52 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது water-resistant உள்ளது. இணைப்பு விருப்பங்களில் USB Type-C போர்ட், ப்ளூடூத் மற்றும் Wi-Fi ஆகியவை அடங்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Motorola Moto
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment