Advertisment

5000 mAh பேட்டரி பவருடன் வரும் மோட்டோவின் புதிய போன்... இந்தியாவில் இன்று முதல் விற்பனை

Moto One Power First Time on Sale : நீண்ட தூரம் பயணம் செல்பவர்களுக்கு, அதிக நேரம் போன் பயன்படுத்துபவர்களுக்கான சரியான தேர்வு இந்த போன்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மோட்டோரோலா ஒன் பவர், Moto One Power, Motorola One Power, Moto One Power Phone on Sale

மோட்டோரோலா ஒன் பவர்

மோட்டோரோலா ஒன் பவர் இன்று முதல் விற்பனையாகிறது. மோட்டோரோலாவின் முதல் நோட்ச் திரையுடன் கூடிய போன் தான் இந்த மோட்டோ ஒன் பவர். ப்ளிப்கார்ட்டில் எக்ஸ்க்லூசிவாக கிடைக்க இருக்கும் இந்த போனை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது மோட்டோ நிறுவனம்.

Advertisment

மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட் போனான இந்த மோட்டோ ஒன் பவரை ஆன்லைனில் செப்டம்பர் 24ம் தேதியில் இருந்து முன்பதிவு செய்து வருகிறார்கள் வாடிக்கையாளர்கள். இன்று மதியத்தில் இருந்து அந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

மோட்டோரோலா ஒன் பவர் - சிறப்பம்சங்கள்

6.2 அங்குல ஃபுல் ஹெச்.டி மற்றும் எல்.சி.டி மேக்ஸ் விஷன் டிஸ்பிளே கொண்ட போன் இதுவாகும். இது 19.9 என்ற திரை ஃபார்மெட்டினை கொண்டிருக்கிறது. ப்ரோசஸ்ஸர் ஸ்னாப்ட்ராகன் 636 ஆகும். ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்கு தளத்தில் இந்த போன் இயங்கி வருகிறது. கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட் அட்ரெனோ 509 ஆகும்.

மெமரி மற்றும் பேட்டரி

4ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இண்டெர்னெல் மெமரியுடன் வரும் இந்த போனின் பேட்டரி சேமிப்புத் திறன் 5000 mAh ஆகும். ஒரு 15 நிமிடம் சார்ஜ் செய்தாலும் 6 மணி நேரம் வரை இந்த போனை பயன்படுத்த இயலும் என்று மோட்டோ நிறுவனம் கூறியிருக்கிறது. அதிக நேரம் பயணம் செல்பவர்கள், அதிக நேரம் போன் உபயோகப்படுத்துபவர்களுக்கு சரியான தேர்வாக இந்த போன் அமையும்.

கேமரா

முதன்மை கேமராக்கள் இரண்டும் 16 எம்.பி மற்றும் 5எம்.பி திறனைக் கொண்டிருக்கிறது. 4K வீடியோவை நீங்கள் இதன் மூலம் எடுக்கலாம். செல்பி கேமராவின் திறன் 12 எம்.பி ஆகும்.

Moto
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment