Advertisment

இந்த புதிய அம்சத்தினால் இனி நெட்ஃப்ளிக்ஸ் பாஸ்வேர்டை நண்பர்களுடன் பகிர முடியாது!

Netflix password sharing could come to an end நிச்சயமாக, குடும்ப உறுப்பினர்கள், வெவ்வேறு நகரங்களில் கூட குறியீடுகளைக் கேட்கலாம். ஆனால்..

author-image
WebDesk
New Update
Netflix password sharing could come to an end Netflix new feature Tamil News

Netflix password sharing could come to an end Netflix new feature Tamil News

நெட்ஃப்ளிக்ஸ் ஒரு புதிய அம்சத்தை சோதிக்கிறது. அதாவது, இனி கணக்கை சொந்தமாக வைத்திருப்பவர்கள் அல்லது கணக்கின் உரிமையாளர்கள் மட்டுமே அதனை அணுக முடியும் என்பதை உறுதி செய்யும். நெட்ஃப்ளிக்ஸ் கணக்குகளுக்கான பாஸ்வேர்ட் பகிர்வு நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே மிகவும் பொதுவானது. ஆனால், வரவிருக்கும் புதிய அம்சத்துடன் நிறுவனம் இதை மிகவும் கடினமாக்குவது போல் தெரிகிறது. உங்கள் கணக்கை அணுகுவதற்கு முன் ஒரு குறியீடு தேவைப்படும்.

Advertisment

இந்த அம்சத்தை காமாவைர் கண்டறிந்தது. மேலும் ஒரு ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் அத்தகைய அம்சத்தை 'தி வெர்ஜ்' சோதிக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது. “இந்த சோதனை நெட்ஃப்ளிக்ஸ் கணக்குகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அவ்வாறு செய்ய அதிகாரம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்த அம்சம் எவ்வாறு செயல்படும்?

அடிப்படையில் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒருவர் கணக்கை அணுக முயற்சி செய்யும்போது, ​​நெட்ஃப்ளிக்ஸ் கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சலுக்கு அல்லது இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறியீட்டைக் கேட்கும். ஸ்கிரீன்ஷாட் அளவிற்கு ஏற்ப ‘பின்னர் சரிபார்க்க’ என்கிற ஒரு விருப்பமும் உள்ளது.

அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது மிகச் சிறிய மாதிரி அளவு பயனர்களுடன் சோதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடன் வாங்கிய கணக்குகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த எச்சரிக்கை காட்டப்படுவதாக அறிக்கை கூறுகிறது. நிச்சயமாக, குடும்ப உறுப்பினர்கள், வெவ்வேறு நகரங்களில் கூட குறியீடுகளைக் கேட்கலாம். ஆனால், நீங்கள் நீண்ட காலமாக உங்கள் நண்பரின் நெட்ஃப்ளிக்ஸ் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இனி அதுபோல செய்யமுடியாது.

‘பின்னர் சரிபார்க்கவும்’ விருப்பத்தைப் பொறுத்தவரை, பயனர்கள் கணக்கை அணுக முயற்சி செய்யும்போது, ​​இன்னும் இரண்டாவது முறையாக எச்சரிக்கை அனுப்பப்படாது.

பாஸ்வேர்ட் பகிர்வில் நெட்ஃப்ளிக்ஸ் சிதைவதைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த ஸ்ட்ரீமிங் சேவையானது 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருந்தாலும், அதன் அமெரிக்க சந்தையிலும் உலக அளவிலும் இது நிறையப் போட்டிகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, இந்தியாவில், ஸ்ட்ரீமிங் வலைத்தளங்களில் நெட்ஃப்ளிக்ஸ் மிகவும் விலையுயர்ந்த சந்தா. நெட்ஃப்ளிக்ஸ் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினால், மேலும் அதிகமான பயனர்கள் பணம் செலுத்த வேண்டும்.

நிறுவனம் இன்னும் அம்சத்தை சோதித்து வருவதால், இது அனைவருக்கும் கிடைக்காத வாய்ப்பாக உள்ளது. ஆனால் அவ்வாறு செய்தால், கணக்கிற்குப் பணம் செலுத்தாமல் சேவையை அணுகும் அனைத்து நெட்ஃப்ளிக்ஸ் ரசிகர்களுக்கும் இது ஒரு மோசமான செய்தியாக இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Netflix India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment