Advertisment

2023-இல் நெட்ஃபிலிக்ஸ் வைக்கும் செக்.. இனி இந்த ஆப்ஷனுக்கு வாய்ப்பில்லை!

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் அடுத்தாண்டு தொடக்கத்தில் பாஸ்வேர்டு சேரிங் ஆப்ஷனை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
sangavi ramasamy
New Update
2023-இல் நெட்ஃபிலிக்ஸ் வைக்கும் செக்.. இனி இந்த ஆப்ஷனுக்கு வாய்ப்பில்லை!

நெட்ஃபிலிக்ஸ் (Netflix) நிறுவனம் சர்வதேச அளவில் ஓடிடி துறையில் முன்னணி வகிக்கிறது. உலகெங்கும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம் பயன்படுத்தப்படுகிறது. 1 மாதம், 3 மாதம், 6 மாதம் என பயனர்களுக்கு ஏற்ற வகையில் சந்தா திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் ஒரு அக்கவுண்ட் பயன்படுத்தி குறிப்பிட்ட நபர்கள் வரை பாஸ்வேர்டு சேர் செய்து பயன்படுத்தலாம். இந்நிலையில், இந்த பாஸ்வேர்டு சேரிங் ஆப்ஷனை நெட்ஃபிலிக்ஸ் (Netflix password sharing) ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நெட்ஃபிலிக்ஸ் பயன்படுத்த அனைவரும் தனித் தனியாக கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும் என்பதாகும். முதலில் அமெரிக்காவில் இதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

100 மில்லியனுக்கும் அதிகமான நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் அக்கவுண்ட் பயன்படுத்தி password sharing முறையில் பயன்படுத்துகின்றனர் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பாஸ்வேர்டு சேரிங் ரத்து செய்யும் முறையை முதலில் அமெரிக்காவில் 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் சோதனை அடிப்படையில் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அவ்வாறு பாஸ்வேர்டு சேர் செய்ய வேண்டும் என்றால் கூடுதலாக பணம் செலுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

ஏன் இந்த முடிவு?

Wall Street Journal அறிக்கை படி, நெட்ஃபிலிக்ஸ் பாஸ்வேர்டு சேரிங் குறித்து நீண்ட காலமாக அறிந்திருக்கிறது. இருப்பினும் இதை ரத்து செய்தால் பயனர்களிடையே எதிர்ப்பு ஏற்படும் என இதை செய்யாமல் இருந்து வந்தது. கரோனா ஊடரங்கு காலத்தில் நெட்ஃபிலிக்ஸ் பயன்பாடு அதிகரித்தது. இதனால் அப்போது பிரச்சனை தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நெட்ஃபிலிக்ஸ் சரிவை கண்டுவருவது காரணமாக பாஸ்வேர்டு சேரிங் முறையை ரத்து செய்யவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெட்ஃபிலிக்ஸ் Q1 2022 வருவாய் அறிக்கையின் படி, கடுமையான போட்டி மற்றும் உக்ரைன் போர் காரணமாக 200,000 சந்தாதாரர்களை சந்தாதாரர்களை இழந்ததாக அறிவித்தது. நிறுவனம் ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தியது, இதன் விளைவாக 700,000 சந்தாதாரர்களை இழந்தது. இரண்டாவது காலாண்டில் இன்னும் மோசமாக இருந்தது. நெட்ஃபிலிக்ஸ் 1 மில்லியன் சந்தாதாரர்களை இழந்தது, இது நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய இழப்பாகும். மேலும், நெட்ஃபிலிக்ஸின் பங்கு 26% சரிந்து, 40 பில்லியன் பங்குகளை இழந்தது. இந்தநிலையில், பாஸ்வேர்டு சேரிங் முறையை நெட்ஃபிலிக்ஸ் ரத்து செய்வதாக கூறப்படுகிறது.

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்தால், பயனர்களிடையே அது எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment