Advertisment

Netflix, Prime Video, Disney+Hotstar, Zee5 ஆகியவற்றின் சந்தா விவரங்கள்

YouTube என்பது நீங்கள் வேடிக்கையாகப் பார்க்கும் ஒன்று, இதற்கு நீங்கள் YouTube Premium சந்தாவை பெறலாம். இது அனைத்து தேவையில்லாத விளம்பரங்களையும் நீக்கி உங்களுக்கி பார்க்கும் அனுபவத்தை சிறப்பாக்குகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Netflix, Prime Video, Disney+Hotstar, Zee5 ஆகியவற்றின் சந்தா விவரங்கள்

உலகில் உள்ள அனைத்து மக்களும் முன்பைவிட இப்போது அதிகமாக ஸ்ட்ரீமிங் (streaming) செய்கின்றனர். OTT தளங்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் ஏற்றத்துக்கான காரணம் சந்தேகத்துக்கு இடமின்றி ஊரடங்கு தான். மக்களுக்கு தற்போதுள்ள ஓய்வு நேரத்தில் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பார்ப்பது தான் நேரம் போக்குவதற்கான ஒரே சிறந்த வழி.

Advertisment

இந்தியாவில் கணக்கிடமுடியாத ஸ்ட்ரீமிங் இயங்குதளங்கள் (streaming platforms) இருக்கின்றன. தொடக்கநிலையாளர்களுக்கு அவர் எந்த தளத்தை தேர்வு செய்ய வேண்டும் அல்லது அவளுடைய ஆர்வத்திற்கு ஏற்றது எது என்பது மிகவும் குழப்பமாக இருக்கும்.

லாக் டவுன் அவசரத்திற்கு அட்டகாச ஆஃபர்: ஜியோ, ஏர்டெல் Fibernet

ஒரு OTT தளத்தை தேர்வு செய்வதற்கு முன்பு, அது தங்கள் பட்ஜெட்டுக்குள் வருகிறதா இல்லையா என்பதை பார்ப்பதற்காக, மக்கள் அதன் சந்தா திட்டங்கள் குறித்து முதலில் தெரிந்துக் கொள்வார்கள். உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக நாடில் உள்ள அனைத்து சிறந்த OTT தளங்கள் மற்றும் அவை எவ்வளவு செலவாகும் என்பதை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

Disney+ Hotstar: Pricing

Disney+ Hotstar தான் இந்தியாவில் அதிகம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள OTT இயங்குதளம். இது அதிகப்படியான அசல் உள்ளடக்கங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு, திரைப்படங்கள் மற்றும் அசல் டிஸ்னி உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. நிறுவனம், Disney+ Hotstar VIP திட்டத்தை வருடத்துக்கு ரூபாய் 399/- என்ற விலையிலும், Premium திட்டத்தை வருடத்துக்கு ரூபாய் 1,499 என்ற விலையிலும் வழங்குகிறது.

Netflix: Pricing

Netflix உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு OTT இயங்குதளம். 2016 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த Netflix, தற்போது நாட்டில் கிடைக்கக்கூடிய மிகவும் விலையுயர்ந்த ஸ்ட்ரீமிங் சேவை தளம். இந்த தளம் பல சந்தா திட்டங்களை வழங்குகிறது அதில் மிகவும் குறைந்த விலையில் உள்ள திட்டம் ரூபாய் 199/- க்கு கிடைக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு SD தரத்தில் உள்ளடக்கத்தை கொடுக்கிறது. இந்த திட்டத்தில் சந்தாதாரர்கள் உள்ளடக்கத்தை கைபேசி அல்லது tablet ல் மட்டும் தான் பார்க்க முடியும். அடிப்படைத் திட்டம் ரூபாய் 499/- க்கும், Standard திட்டம் ரூபாய் 649/- க்கும், Premium திட்டம் ரூபாய் 799/- க்கும் கிடைக்கிறது.

publive-image

Amazon Prime Video: Pricing

Amazon Prime Video தான் அதிகப்படியான நன்மைகளை நியாயமான விலையில் தனது பயனர்களுக்கு கொடுக்கும் ஒரு OTT சேவை. வீடியோ ஸ்ட்ரீமிங் நன்மைகள் தவிர வாடிக்கையாளர்களுக்கு இசை ஸ்ட்ரீமிங் மற்றும் விரைவான ஆர்டர் விநியோக நன்மைகள் ஆகியவற்றையும் வழங்குகிறது. சந்தா திட்டங்களாக ரூபாய் 129/- க்கான மாதாந்திர திட்டம் மற்றும் ரூபாய் 999/- க்கான வருடாந்திர திட்டம் ஆகியவற்றை Amazon Prime வழங்குகிறது.

ZEE5: Pricing

Zee Media corporation ஆல் நிர்வகிக்கப்படும் ZEE5, OTT இயங்குதளம் அனைத்து Zee இயங்குதள நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை உள்ளடக்கியது. ரூபாய் 99/- க்கான மாதாந்திர திட்டத்தையும் ரூபாய் 999/- க்கான வருடாந்திர திட்டத்தையும் இது வழங்குகிறது.

publive-image

YouTube Premium: Pricing

YouTube என்பது நீங்கள் வேடிக்கையாகப் பார்க்கும் ஒன்று, இதற்கு நீங்கள் YouTube Premium சந்தாவை பெறலாம். இது அனைத்து தேவையில்லாத விளம்பரங்களையும் நீக்கி உங்களுக்கி பார்க்கும் அனுபவத்தை சிறப்பாக்குகிறது. அதிலுள்ள அசல் உள்ளடக்கத்தையும் நீங்கள் பார்க்கலாம். சந்தாவாக மாதத்துக்கு ரூபாய் 129/- ம், மூன்று மாதங்களுக்கு ரூபாய் 399 ஐயும் வழங்குகிறது. மாணவர்களுக்கு தள்ளுபடி திட்டமும் உள்ளது.

publive-image

SonyLIV: Pricing

கபிலுடன் சிரிப்பு இரவுகள், KBC மற்றும் Savdhaan இந்தியா ஆகிய நிகழ்ச்சிகளை நீங்கள் விரும்பினால் SonyLIV க்கு சந்தாதாரர் ஆகுங்கள். வாராந்திர திட்டம் ரூபாய் 29/- க்கும், மாதாந்திர திட்டம் ரூபாய் 99/- க்கும், அரையாண்டு திட்டம் ரூபாய் 299/-க்கும் வருடாந்திர திட்டம் ரூபாய் 499/-க்கும் நிறுவனம் வழங்குகிறது.

Voot: Pricing, benefits

Voot, Viacom18 என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. எனவே இது இயல்பாக Big Boss, Naagin போன்ற நிறுவனத்தின் நிகழ்ச்சிகளையும் வழங்கும். இந்த இயங்குதளத்தின் premium சந்தாவாக Voot Select மாதாத்துக்கும் ரூபாய் 99/- க்கும், வருடத்துக்கு ரூபாய் 999/- க்கும் கிடைக்கிறது.

பொய்ச் செய்தி பார்த்து பதற வேண்டாம்: வாட்ஸ் அப் புதிய வசதி

MX Player: Pricing

MX Player அதன் தொடக்கத்திலிருந்து பன்மடங்கு வளர்ந்துள்ளது. .mkv உட்பட பல வீடியோ வடிவங்களை இயக்க கூடிய ஒரு சாதாரண வீடியோ பிளேயராக மட்டுமே இது முன்பு இருந்தது. இந்த இயங்குதளம் முற்றிலும் இலவசமாக கிடைக்கக்கூடியது மேலும் இதை பயன்படுத்த பயனர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதன் காரணமாக இதில் நிறைய விளம்பரங்கள் வரும்.

AltBalaji

சில ’சூடாக்கும்’ நிகழ்ச்சிகளை பார்க்கும் மனநிலையில் நீங்கள் இருந்தால் AltBalaji ஐ பயன்படுத்தி பார்க்கலாம். இந்த ஆப்பில் Gandi Baat, Who’s Your Daddy மற்றும் X.X.X. Uncensored போன்ற பல பிரபல நிகழ்ச்சிகள் உள்ளன. மிகவும் மலிவாக் காலாண்டுக்கு ரூபாய் 100/- ம், வருட திட்டம் ரூபாய் 300/- க்கும் கிடைக்கிறது. உங்கள் காதல் வாழ்க்கையில் விஷயங்களை மசாலா செய்ய விரும்பினால் இந்த சிற்றின்ப நிகழ்ச்சிகளை தனியாக மட்டும் பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Amazon Prime
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment