Advertisment

Jiophone Prepaid Plan: ரூ22-க்கு பிரீபெய்ட் டேட்டா; மலிவான விலையில் எத்தனை ஸ்கீம்னு பாருங்க!

New jiophone prepaid plans மேலும், இரண்டு திட்டங்களுடன் ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
New jiophone prepaid plans launched starting at Rs 22 offers up to 6gb data Tamil News

New jiophone prepaid plans launched starting at Rs 22 offers up to 6gb data Tamil News

New jiophone prepaid plans Tamil News : ரிலையன்ஸ் புதிய ஜியோபோன் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.22 முதல் தொடங்குகிறது. தொலைத்தொடர்பு ஆபரேட்டரான ஜியோபோன் அதன் பயனர்களுக்கு ரூ.22, ரூ.52, ரூ.72, ரூ.102 மற்றும் ரூ.152 உள்ளிட்ட 5 புதிய டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை சேர்த்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களுடன் நிறுவனம் 6 ஜிபி வரை அதிவேக டேட்டாவை வழங்குகிறது. புதிய ரூ.749 ப்ரீபெய்ட் ஆல் இன் ஒன் ஜியோ திட்டமும் உள்ளது. இது அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் டேட்டா சலுகைகளை வழங்குகிறது.

Advertisment

ஜியோபின் டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஜியோபோனுக்கான அடிப்படை ரூ.22 ப்ரீபெய்ட் திட்டம், 28 நாட்களுக்கு மொத்தம் 2 ஜிபி தரவை வழங்குகிறது. ரூ.52 டேட்டா ரீசார்ஜ் திட்டத்தில், 28 நாட்கள் செல்லுபடியாகும் 6 ஜிபி டேட்டா உள்ளது. குறிப்பிடப்பட்ட டேட்டா தீர்ந்ததும், நீங்கள் இன்னும் ஆன்லைனில் உள்ளடக்கத்தை பிரவுஸ் செய்ய முடியும். ஆனால், 64Kbps வேகத்தில்தான் அதனை செய்ய முடியும். மேலும், இரண்டு திட்டங்களுடன் ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

ஜியோபோன் பயனர்கள், JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioNews ஆகிய பயன்பாடுகளைப் பெறுகின்றனர். எல்லா திட்டங்களுடனும் இந்த பயன்பாடுகளைப் பெறுவீர்கள். ரூ.72 ஜியோபோன் டேட்டா பேக் மூலம், ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டாவைப் பெறலாம். இது, 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.

ரூ.102 ஜியோபோன் டேட்டா திட்டம் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்துடன் நீங்கள் மொத்தம் 28 ஜிபி பெறுவீர்கள். ரூ.152 ஜியோபோன் திட்டமும் உள்ளது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு, பயனர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா பெறுவார்கள். அதாவது ரூ.152 திட்டத்தை வாங்குபவர்களுக்கு ரிலையன்ஸ் மொத்தம் 56 ஜிபி வழங்குகிறது.

ஜியோபோன் பயனர்களுக்கான இந்த டேட்டா அனைத்தும் ப்ரீபெய்ட் திட்டங்கள் என்பதால், நிறுவனம் எந்த வாய்ஸ் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஜியோபோன் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மைகள்

தற்போது, இந்த தொலைத்தொடர்பு ஆபரேட்டருக்கு ஐந்து ஜியோபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. அவை அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சலுகைகளை வழங்குகின்றன. ரூ.185 ஜியோபோன் திட்டமும் உள்ளது. இது, 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும். அதாவது, பயனர்கள் 56 ஜிபி மொத்த டேட்டாவை பெறுவார்கள். இதில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் இலவசம் ஆகியவை அடங்கும்.

ரூ.749 திட்டம், 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் மாதத்திற்கு 50 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ.155 ப்ரீபெய்ட் ஜியோபோன் திட்டத்தில் 1 ஜிபி தினசரி டேட்டா உள்ளது. மேலும், ரூ.125 ஜியோபோன் திட்டம் தினசரி அடிப்படையில் 0.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இறுதியாக, ரூ.75 ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அனைத்து திட்டங்களும் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்குகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Jio Recharge Plan Jiophone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment