Advertisment

2023 New year Gadgets gift: போன் முதல் வாட்ச் வரை.. அன்பிற்குரியவர்களுக்கு புத்தாண்டு பரிசு

Happy new year gift 2023: புத்தாண்டில் அன்பிற்குரியவர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்ச்சியை வெளிபடுத்துங்கள்.

author-image
WebDesk
New Update
2023 New year Gadgets gift: போன் முதல் வாட்ச் வரை.. அன்பிற்குரியவர்களுக்கு புத்தாண்டு பரிசு

Happy new year gift | 2023 புத்தாண்டு பரிசு | புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிசுஉலகம் முழுவதும் இனிய புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். கிறிஸ்துமஸ் தொடங்கி புத்தாண்டு வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடும்பத்துடன் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். வெளியூர்களுக்கு சென்றும் வெளிநாட்டிற்கு சென்றும் விடுமுறையை கழித்து வருகின்றனர். புத்தாண்டில் அன்பிற்குரியவர்களுக்கு பரிசு வழங்குவது நமக்கும் அவர்களுக்கும் மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும். இந்த புத்தாண்டில் என்ன பரிசு கொடுப்பது என குழப்பம் இருந்தால் இங்கே சில பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பரிசளிக்கலாம்.

Advertisment

ஆப்பிள் ஐபோன் 14

ஆப்பிள் ஐபோன் 14 அமேசான் தளத்தில் ரூ. 77,490க்கு கிடைக்கிறது. ஐபோன் 14 ஆனது 2532x1170 பிக்சல்கள் தரத்தில் 6.1 இன்ச் Super Retina XDR டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது Apple A15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 128GB, 256GB மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி கொண்டது.

நத்திங் போன் (1)

Nothing Phone (1) பிளப்காட்டில் ரூ.27,999 முதல் கிடைக்கிறது. ந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778+ ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 60 ஹெர்ட்ஸ் முதல் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 6.55 முழு எச்டி+ OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. டூயல் கேமரா வசதி உள்ளது. பிரதான கேமரா முதன்மையான சோனி IMX766 மூலம் இயக்கப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் எஸ்.இ

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் அமேசானில் தள்ளுபடி விலையில் ரூ. 30,900 விற்பனையாகிறது. Apple Watch Series SE ஆனது, கால், மெசேஜ் பதில் அளிக்கும் அம்சத்தை வழங்குகிறது. Apple Watch SE மூலம் தினசரி செயல்பாட்டைக் கண்காணிக்கலாம். இதய செயல்பாடு, SOS அம்சம் கொண்டுள்ளது.

கூகுள் பிக்சல் வாட்ச்

Google Pixel Watch ரூ.35,100 என ஆரம்ப விலையுடன் வருகிறது. கூகுள் பிக்சல் வாட்ச் வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. Google வழங்கும் Wear OS மூலம் இது இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்வாட்ச் கீறல் விழுவதை தடுக்கும் scratch-resistant அம்சத்தை கொண்டுள்ளது. கார்னிங்(ஆர்) கொரில்லா(ஆர்) கிளாஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 5 ஏடிஎம் (50 மீட்டர்) water resistance கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment