நோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 அறிமுகம்! ரூ.999 விலையில் ஆரம்பம்!

எச்எம்டி குளோபல் நிறுவனமானது நோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 என இரண்டு ஃபீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. மாறுபட்ட டிசைனை கொண்டிருக்கிறது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 130 மற்றும் நோக்கியா 130 என்ற இரண்டு ஃபீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த நோக்கியா 105 ஃபிச்சர் போனானது அப்ஃகிரேடு செய்யப்பட்டுள்ளதோடு, நோக்கியா s30+ ப்ளாட்ஃபார்மில் இயங்கக் கூடியது. குறிப்பிடும்படியாக நோக்கியா 150 இரண்டு வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சிம் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நோக்கியா 105-ன் விலை ரூ.999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, டூயள் சிம் பொருத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நோக்கியா 105-ன் விலை ரூ.1149 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது.

நோக்கியா 130-போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. ஆனாலும், அதன் விலை எவ்வளவு என்பது குறித்து அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. 4 வருடங்களுக்கு முன்பு வெளியான நோக்கியா 105 போனை போல் அல்லாமல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 105 ஃபீச்சர் போனானது முற்றிலும் மாறுபட்ட டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 105-ல் டிசைனில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மற்ற அம்சங்களில் புதியதாக எதுவும் கொண்டு வரப்படவில்லை.

சிறப்பம்சங்கள்

 • 1.8 இன்ச் கலர் டிஸ்ப்ளே
 • 4எம்.பி ரேம்
 • 4எம்.பி ரோம்
 • 800mAh திறன் கொண்ட பேட்டரி ( 15 மணி நேரம் டாக் டைம்)
 • எஃப்.எம் ரேடியோ
 • நோக்கியா s30+ ஃப்ளாட்ஃபார்மில் இயங்கக்
  கூடியது
 • Snake Xenzia போன்ற கேம்கள் உள்ளன
 • ஃப்ளூ, ப்ளாக் மற்றும் வொயிட் போன்ற நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

விரைவில் நோக்கியா 130 ஃபீச்சர் போனை வெளியிட எச்எம்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நோக்கியா 130 ஃபீச்சர் போனை பொறுத்தவரையில்,

 • 1.8 இன்ச் டிஸ்ப்ளே
 • 4 எம்.பி ரேம்
 • 8 எம்.பி ரோம்
 • ஸ்டோரேஜ், எஸ்.டி கார்டு மூலமாக 32 ஜி.பி வரை மேம்படுத்திக் கொள்ள முடியும்
 • 1020mAh பேட்டரி,(44 மணி நேரம் வரை எஃப்.எம் கேட்டுக் கொள்ள முடியுமாம்)
 • ப்ளூடூத், 0.3 எம்.பி பின்புற கேமரா ஆகிவவை கொடுக்கப்பட்டுள்ளன.
 • நோக்கியா s30+ ஃப்ளாட்ஃபார்மில் இயங்கக் கூடியது.
 • ஃப்ளூ, ப்ளாக் மற்றும் வொயிட் போன்ற நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

உலகளவில் நோக்கியா 130 ஃபீச்சர்போனின் விலை $21.50 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்க்கும் போது நோக்கியா 130 ஃபீச்சர் போனின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1384 இருக்கலாம் என தெரிகிறது. இந்த போன் ப்ளாக், ஃக்ரே மற்றும் ரெட் போன்ற நிறங்களில்

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சப்போர்ட் செய்யக்கூடிய ஃபீச்சர் போனை அறிமுகம் செய்யதிட்டமிட்டுள்ள நிலையில், நோக்கியா இரண்டு ஃபீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் அறிமுகம் செய்யவுள்ள ஃபீச்சர் போனின் விலை ரூ.500 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21-ம் தேதி நடைபெறவுள்ள ரிலையஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close