Advertisment

ரூ.10,399 விலையில் நோக்கியா 2.4 இந்தியாவில் அறிமுகம்

Nokia 2.4 in India Price இரண்டு வருட ஆண்ட்ராய்டு மேம்படுத்தல்கள் மற்றும் மூன்று வருட மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் நிறுவனம் உறுதியளிக்கிறது.

author-image
WebDesk
New Update
Nokia 2.4 Price in India is Rs 10399 Latest Smartphone Online Tamil News

Nokia 2.4 Price in India is Rs 10,399

Nokia 2.4 Price is Rs.10,399 in India : HMD குளோபல், 3 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன் நோக்கியா 2.4-ஐ இன்று ரூ.10,99-க்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது நோக்கியா இணையதளத்தில் ஆன்லைனில் பிரத்தியேகமாகக் கிடைக்கும். நோக்கியா 2.4 அதன் முந்தைய மாடல் 6.2 இன்ச் திரையுடன் ஒப்பிடும்போது இதில் பெரிய 6.5 இன்ச் எச்டி + திரை இருக்கிறது. இந்த பெரிய திரை 20: 9 மற்றும் 1600 × 720 பிக்சல்கள் விகிதத்தைக் கொண்டுள்ளது.

Advertisment

நோக்கியா 2.4 மீடியாடெக் ஹீலியோ P22 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 10 OS-ஆல் இயங்குகிறது. ஆனால், ஆண்ட்ராய்டு 11-ம் தயாராக இருப்பதாக நோக்கியா கூறுகிறது. இரண்டு வருட ஆண்ட்ராய்டு மேம்படுத்தல்கள் மற்றும் மூன்று வருட மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் நிறுவனம் உறுதியளிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன், முன்பக்கத்தில், 5MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இது எல்லா இடங்களிலும் குறிப்பிடத்தக்க பெசல்களையும், திரையின் அடிப்பகுதியில் நோக்கியா சின்னத்தையும் கொண்டுள்ளது. பின்புறத்தில், 13MP முதன்மை கேமராவுடன் இரட்டை கேமரா அமைப்பையும், உருவப்பட காட்சிகளுக்கு 2MP டெப்த் சென்சாரையும் கொண்டுள்ளது. கேமரா தொகுதிக்குக் கீழே பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. பயனர்கள் AI தொலைபேசி திறப்புடன் தொலைபேசியைத் திறக்கலாம்.

இவை அனைத்தும் அடாப்டிவ் பேட்டரி தொழில்நுட்பத்துடன் 4,500 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகின்றன. அதன் பேட்டரி இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் என்று ஃபின்லாந்தை தளமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் கூறுகிறார். வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவு எதுவும் இதில் இல்லை மற்றும் டைப்-சி போர்ட்டும் இதில் இல்லை.

பெரும்பாலான பட்ஜெட் தொலைபேசிகளைப் போலவே, நோக்கியா 2.4-க்கும் ஒரு ஹெட்போன் ஜாக் உள்ளது. மேலும், இடது பக்கத்தில் பிரத்யேக கூகுள் அசிஸ்டென்ட் பாட்டனும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டஸ்க், சார்கோல், மற்றும் ஃப்ஜோர்ட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்கக்கூடியது.

ரியல்மி நர்சோ மற்றும் சி சீரிஸ், மைக்ரோமேக்ஸ் IN நோட் 1, ரெட்மி 9 ப்ரைம், மோட்டோ ஜி 9 உள்ளிட்ட மொபைல்களுக்கு எதிராக நோக்கியா 2.4 உயரும். பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நோக்கியா சாதன விவரக்குறிப்புகளை அதிகமாக்குவதை விடச் சுத்தமான மென்பொருள் அனுபவத்தையே பிரதானமாக வைத்திருப்பதாகத் தெரிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Nokia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment