Advertisment

நோக்கியா 2 ஸ்மார்ட்ஃபோன் சிறப்பம்சங்களை வெளியிட்ட அன்டுடு இணையத்தளம்

எச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 2 ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள் அன்டுடு இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
nokia 2 smartphone, nokia 3 smartphone, nokia company,

எச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 2 ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள், சீனாவின் அன்டுடு இணையத்தளத்தில் கசிந்துள்ளன.

Advertisment

விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் நோக்கியா 2 ஸ்மார்ட்ஃபோன், மலிவு விலை ஃபோனாக இருக்கும் என மட்டுமே முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அன்டுடு இணையத்தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், அந்த இணையத்தளத்தில் நோக்கிய 2 ஸ்மார்ட்ஃபோனின் ஹார்ட்வேர், மெமரி, டிஸ்பிளே உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. எச்.டி. (1280*720) டிஸ்பிளே கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் அளவு, வகை ஆகியவை குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், அது 5 இஞ்ச் கொண்டதாக இருக்கலாம் என வதந்திகள் பரவி வருகின்றன.

1 ஜி.பி. ரேம், 8 ஜிபி இண்டர்நல் மெமரி, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. பிரைமரி கேமரா ஆகியவை கொண்டதாக நோக்கியா 2 ஸ்மார்ட்ஃபோன் இருக்கும். இந்த ஸ்மார்ட்ஃபோன், 7.1.1 நௌகட் இயஹ்குதளம் கொண்டதாக இருக்கும் என அன்டுடு இணையத்தளம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 3-ஐ விட, நோக்கியா 2 ஃபோன் மலிவு விலையிலிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கிய 3-ன் விலை ரூ.8,000 என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், நோக்கிய 2-ன் விலை ரூ.6,000-ஆக இருக்கலாம். அக்டோபர் 31-ஆம் தேதி நோக்கியா-2 ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment