3ஜி வசதி கொண்ட “நோக்கியா 3310” ஃபீச்சர்போன்! அறிமுகம் எப்போது?

நோக்கியா 3310 ஃபீச்சர் போன் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் வெளியாக வாய்ப்பு

3ஜி சப்போர்ட் செய்யக்கூடிய நோக்கியா 3310 ஃபீச்சர் போன் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

எச்.எம்.டி நிறுவனத்தின் நோக்கியா 3310 போன் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் ஏற்கெனவே அறிமுகம் செய்தது. உலகளவில் இந்த போன் இன்னமும் விற்பனையில் தான் உள்ளது. ரூ.33,10 என்ற விலையில் இந்த போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இதில் என்ன குறைபாடு என்றால், இந்த போன் 3ஜி சப்போர்ட் செய்யாததே.

எனவே, 3ஜி வசதியை நோக்கியா 3310-போனில் அறிமுகம் செய்ய எச்.எம்.டி குளோபல் நிறுவனம் திட்டமிட்டது. இந்தநிலையில், அயர்லாந்து தொலைதொடர்பு நிறுவனமான த்ரி(Three) ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மேம்படுத்தப்பட்ட நோக்கியா 3310 வரும் செம்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், ஏற்கெனவே நோக்கிய 3310 போனை வாங்கியவர்களுக்கு இது சோகமான செய்தியாக தான் இருக்க முடியும். இந்திய சந்தையில் நோக்கியாவிற்கு இன்னமும் மதிப்பு இருந்து தான் வருகிறது. ஆனாலும், 4ஜி வோல்ட்இ வசதியை கொண்ட ஃபீச்சர்போனை ஜியோ அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்போது நோக்கியா 3ஜி வசதிகொண்ட ஃபீச்சர் போனை அறிமுகம் செய்யவுள்ளது. மேலும், நோக்கியா 3310 ஃபீச்சர்போனில் உள்ள சிறப்பம்சங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது அதன் விலை சற்று அதிகமாக இருப்பதாகவே தோன்றுகிறது.

இன்டெக்ஸ்,லாவா போன்ற மொபைல் நிறுவனங்கள் 4 ஜி வசதி ஃபீச்சர் போன்களின் விலையானது, தற்போது விற்பனையில் உள்ள நோக்கியா 3310-ன் விலையை காட்டிலும் சற்று குறைவாக உள்ளதாகவே தெரிகிறது. எனவே, நோக்கியா 3ஜி வசதியுடன் ஃபீச்சர்போனை அறிமுகம் செய்தாலும், கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றே கூறப்படுகிறது.

×Close
×Close