ஆகஸ்ட்-15 முதல் நோக்கியா-5 ஸ்மார்ட்போன்... ஆஃப்லைனில் மட்டுமே விற்பனை!

எச்.ம்.டி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் இந்த நோக்கியா 5 ஸ்மார்போனாது, கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக முன்பதிவு ஜூலை மாதம் தொடங்கியது.

நோக்கியா 5 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 15-முதல் விற்பனைக்கு வருகிறது.

இந்த ஸ்மாட்போனானது, ஆஃலைனில் மட்டுமே கிடைக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. எச்.ம்.டி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் இந்த நோக்கியா 5 ஸ்மார்போனாது, கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக முன்பதிவு ஜூலை மாதம் தொடங்கியது. நோக்கியா-5 ஆஃப்லைனில் மட்டுமே கிடைக்கக் கூடியது என்பதை எச்.எம்.டி நிறுவனமும் உறுதி படுத்தியுள்ளது.

எனவே, அனைத்து முன்னணி மொபைல் ஸ்டோர்களிலும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நோக்கியா-5 ஸ்மாட்போனை வாங்கிக் கொள்ள முடியும் என எச்.எம்.டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் விலை ரூ.12.499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 5 ஸ்மார்ட்போனாது, மேட் பிளாக், சில்வர், டெம்பர்டு ப்ளூ மற்றும் காப்பர் போன்ற 4 நிறங்களில் வெளிவருகிறது. தொடக்கத்தில் மேட் ப்ளாக் மட்டுமே விற்பனைக்கு வரும் என்றும், சில்வர், டெம்பர்டு ப்ளூ மற்றும் காப்பர் போன்ற நிறங்கள் கொண்ட நோக்கியா 5 ஸ்மார்ட்போன் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான நோக்கியா 3 ஸ்மார்ட்போனாது ரூ.9,499 என்ற விலையில் விற்பனையில் உள்ளது. இதேபோல, விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 6 ஸ்மாட்ர்போனானது ஆன்லைனில் கிடைக்கக்கூடியது. அமேசான் இணையதளத்தில் இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

நோக்கியா 5 ஸ்மார்ட்போனாது, ரெட்டிமி நோட் 4 மற்றும் மோட்டோ ஜி5 போன்ற போன்ற ஸ்டார்ட்போன்களில் விலையோடு ஒப்பிடும்படி உள்ளது.

நோக்கியா 5 -ன் சிறப்பம்சங்கள்

  • மெட்டல் யுனிபாடி டிசைன்
  • 5.2 இன்ச் எச்.டி ஐபிஎஸ் டிஸ்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசஸர்
  • 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜி.பி ஸ்டோரேஜ்
  • 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் 8 எம்.பி செல்ஃபி கேமரா
  • 3000 mAh பேட்டரி திறன்
  • முன்பகுதியில் ஃபின்கர்ப்ரிண்ட் ஸ்கேனர் உள்ளது.
  • ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.

எச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் இந்திய பிரிவின் துணைத்தலைவர் அஜய் மேத்தா, நோக்கியா 5 ஸ்மார்ட்போன் குறித்து தெரிவித்துள்ளதாவது: தற்போதைய நிலையில் மக்கள் கையில் வைத்துக் கொள்ளும் வகையில் அடக்கமான மொபைல் போன்களையே விரும்புகின்றனர். அதன்படி பார்க்கும் போது 5.2 இன்ச் மற்றும் தனித்துவமான டிசைனில் இந்த நோக்கியா 5 ஸ்மாட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நோக்கியா 5-ன் விற்பனை துவக்க நாளையொட்டி சிறப்பு ஆஃபர்களும் வழங்கப்படுகின்றன. வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒருமாத காலத்திற்கு 5 ஜி.பி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மேக்மைட்ரிப் மூலமாக ஹோட்டல், உள்ளூர் விமான போக்குவரத்து ஆகியவற்றிற்கு ரூ.2500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close