பார்சிலோனாவில் நடைபெறவுள்ள சர்வதேச மொபைல் விழாவில், நோக்கியாவின் அடுத்த வரவான நோக்கியா 8 சிராக்கோ ஸ்மார்ட்ஃபோன் அறிமுகமாகிறது.
நோக்கியா நிறுவனம் மொபைல் வரலாற்றில் படைத்த சாதனைகள் ஏராளம். நோக்கியாவின் ஆரம்ப மாடலான நம்பர் ப்ளேட் 110 விற்கு இன்றைய ஸ்மார்ட்ஃபோன் உலகிலும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த அளவிற்கு நோக்கியா, தனது வாடிக்கையாளரிடம் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், நோக்கியாவின் அடுத்த தலைமை மாடலான நோக்கியா 8 சிராக்கோ இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கு முன்பு அறிமுகமான நோக்கியாவின் 8800 மொபைல் பிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து, ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி சிப்செட் கொண்டு நோக்கியா 8 சிராக்கோ வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 845 எஸ்ஓசி சிப்செட்டில் வெளிவரவிருக்கும் முதல் ஸ்மார்ட்ஃபோன் இதுவேயாகும்.
ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை பின்புலமாக கொண்டு இயக்கப்படும் இந்த ஃபோன், ஐபி67 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழ் உடன் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டின் சர்வதேச மொபைல் விழாவில் நோக்கியா 8 சிராக்கோ உடன், நோக்கியா 9, நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 3310 4G ஆகிய மாடல்கள் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் குறித்த பல்வேறு விவரங்கள் இணையத்தில் அதிகளவில் பரவி வருகிறது.
நோக்கியா 8 சிராக்கோ மாடலின் சிறப்பமசங்கள்
*18:9 திரை விகிதம்
*இரட்டை பின்புற கேமரா (12 எம்பி+13எம்பி)
*13 எம்பி கேமரா செல்ஃபி கேமரா
*5.5 இன்ச் டிஸ்ப்ளே
*3250எம்ஏஎச் பேட்டரி
* ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி
*யூஎஸ்பி டைப்-சி போர்ட்
*செய்ஸ் ப்ரோவ்ஃப் கேமரா
நோக்கியா 8 சிராக்கோ மாடல் 6 ஜிபி ரேம் உடன் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. அதனுடன் இதன் விலை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.