Advertisment

16 எம்.பி செல்ஃபி கேமராவுடன், 5,000 எம்ஏஎச் பேட்டரி... அசரவைக்கும் நுபியா N2 ஸ்மார்ட்போன்!

4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளதால், ஒரே சமயத்தில் பல்வேறு ஆப்ஸை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
nubia-n2-

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான நுபியா தனது புதிய தயாரிப்பான நுபியா N2 ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

நுபியா அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்போனின் விலை ரூ.15,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமேசான் இணையதளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடும்படியாக செல்ஃபி கேமரா என்பது அசரவைக்கும் வகையில் அமைந்துள்ளது. 16 எம்.பி கொண்ட செல்ஃபி கேமரா மற்றும் 13 எம்.பி கொண்ட ரியர் கேமரா  என்பது இந்த ஸ்மார்ட்போனின் ஹைலைட்ஸ்.

ரூ.15,999 என்ற விலை என்று பார்க்கும் போது மோட்டோ ஜி5 ப்ளஸ், ஜியோமி ரெட்மி நோட் 4 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 6 போன்றவற்றுடன் போட்டிக்கு களம் இறங்கியிருப்பதாக தெரிகிறது இந்த நுபியா N2.

அது மட்டுமல்லாமல், 5000எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் இதில் உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு சார்ஜை தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது. எனவே, அதிகமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த பேட்டரி திறன் பயனளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி திறன் குறித்து நுபியான நிறுவனம் தெரிவிப்பதாவது: 5,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி திறன் மூலம் சுமார் 12 மணி நேரம் வெப் ப்ரவுசிங், 60 மணி நேரம் வாய்ஸ் கால், 41.5 மணி நேரம் மியூசிக், 11 மணி நேரம் வீடியோ அல்லது 8.4 மணி நேரம் கேம் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • 5.5 இன்ச் டிஸ்பிளே
  • ரெசலூசன் 1080x1920 பிக்சல்ஸ்
  • 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளதால், ஒரே சமயத்தில் பல்வேறு ஆப்ஸை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது.
  • 68 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.
  • தற்போது பல்வேறு ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு நௌகட் அப்டேட் வந்துவிட்ட போதிலும், நுபியா N2 ஸ்மார்ட்போனில் இன்னமும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஸ்மெலோ தான் கொடுக்கப்பட்டுள்ளது.
  • 16 எம்.பி செல்ஃபி கேமரா, 13 எம்.பி ரியர் கேமரா
  • 5000 எம்ஏஎச் பேட்டரி
  • டுயல் சிம்(நானோ+நானோ)

இது குறித்து நுபியா நிறுவனத்தின், இந்தியாவின் தலைமை அதிகாரி கூறும்போது: இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் நுபியாவின் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும், வாடிக்கையாளர்களின் கருத்துகளைக் கொண்டு, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வெளியிடப்பட்டு வருகிறது என்றார்.

Amazon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment