Advertisment

இந்தியாவில் நுழைந்த என்.யு.யு... புதியதாக 4 வோல்ட்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஸ்மார்ட்போன் நிறுவனமான என்.யு.யு, இந்தியாவில் புதியதாக வோல்ட்இ சப்போர்ட் செய்யக்கூடிய நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
nuu-smartphone-

இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் புதியதாக என்.யு.யு என்ற புதிய ஸ்மார்ட்போன் நிறுவனம் நுழைந்துள்ளது.

Advertisment

ஹாங் காங் தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்மார்ட்போன் நிறுவனமான என்.யு.யு, இந்தியாவில் புதியதாக வோல்ட்இ சப்போர்ட் செய்யக்கூடிய நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவை X5, M3, Q626 மற்றும் Q500 போன்ற மாடல்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது. மேலும், 1.5GHz ஆக்டோ-கோர் ப்ராசஸர் மீடியாடெக் MT6750T, 3ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ்(128 ஜி.பி வரை ஸ்டோரேஜை அதிகரித்துக் கொள்ள முடியும்). இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.9,999 முதல் ரூ.15,999 வரையிலான விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

X5 ஸ்மார்ட்போனானது 13 எம்.பி ரியர் கேமராவும், 5 எம்.பி செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. M3, Q626 மற்றும் Q500 ஆகிய ஸ்மார்ட்போன்களில் 8 எம்.பி ரியர் கேமராவும், 5 எம்.பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

என்.யு.யு நிறுவனத்தின் சேர்மன் மைக்கேல் சிட் கூறும்போது: ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் நாங்கள் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என்.யு.யு நிறுவனத்தை பொறுத்தவரையில் தரம்வாய்ந்த பாகங்களை பயன்படுத்தியே ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறோம். எனவே, என்.யு.யு இந்திய சந்தையில் சிறந்த இடத்தைப் பிடிக்கும் என்று கூறினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment