Advertisment

ஒன் பிளஸ்ஸில் புது அப்டேட்... இன்ஸ்டால் செய்வது எப்படி?

ஒன் பிளஸ் 10 Pro மொபைலில் OxygenOS 13 சோதனை அடிப்படையில் பயன்படுத்துவதற்கான வசதியை ஒன் பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
ஒன் பிளஸ்ஸில் புது அப்டேட்... இன்ஸ்டால் செய்வது எப்படி?

ஒன் பிளஸ் மொபைல் போன் ஆண்ட்ராய்டு போன்களில் முதன்மையானது. ஐபோனுக்கு இணையான ஆண்ட்ராய்டு போன்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இளைஞர்களிடையே இந்த போன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த அளவிற்கு இதில் உள்ள வசதிகள் பெரிதும் கவர்ந்துள்ளது.

Advertisment

ஒன் பிளஸ் நிறுவனமும் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களுடன் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் OnePlus 10T மொபைலை அறிமுக்கப்படுத்தியது. அப்போது ​​OnePlus 10 Pro மொபைலில் OxygenOS 13 அப்டேட் செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்தது. மேலும், ​​OnePlus 10 Pro மொபைல் தான் OxygenOS 13 அப்டேட் பெறும் முதல் மொபைல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஓஎஸ்ஸை சோதனை அடிப்படையில் பயன்படுத்துவதற்கான வசதியை ஒன் பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. OxygenOS 13 open beta வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

வட அமெரிக்கா, இந்தியாவில் உள்ளவர்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம். OxygenOS 13 வசதி பல்வேறு அம்சங்களுடன் இருக்கும். புதிய அனிமேஷன் எஞ்சின், சவுண்ட் குவாலிட்டி, டால்பி சவுண்ட் குவாலிட்டி, புதிய Bitmoji AOD அனிமேஷன்கள் மற்றும் கேமிங்கிற்கான ஹைப்பர்பூஸ்ட் GPA 4.0 போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன.

OxygenOS 13 நிலையான அப்டேட் இல்லை. பீட்டா பயன்பாடு மட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சோதனை அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்ட் ரன் மாதிரியான பயன்பாடு. ஓஎஸ்ஸில் பிரச்சனை ஏதும் உள்ளதா (bugs), பரவலாக பயன்படுத்த முடியுமா, எல்லா அம்சங்களையும் பயன்படுத்த முடிகிறதா என இந்த சோதனையில் கண்டறிய வசதியாக இருக்கும். OnePlus 10 Proக்கான OxygenOS 13 open beta 1 பயன்பாட்டின் மூலம் ஏற்கனவே சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளது.

OnePlus 10 Pro போனில் OxygenOS 13 open beta எப்படி இன்ஸ்டால் செய்வது?

இந்த வசதியை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்வதற்கு முன்னாள் பயனர்கள் தங்களது தரவுகள், டேட்டா, முக்கியமான தகவல்களை பேக்அப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இடையில் சில சிக்கல்கள் ஏற்படலாம், அதனால் பேக்அப் எடுத்து வைப்பது அவசியம்.

நீங்கள் கவனிக்க வேண்டியவை

OxygenOS 13 open beta இன்ஸ்டால் செய்வதற்கு முன்னாள் சமீபத்திய ஓஎஸ் OxygenOS 12 A.15 தான் பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் போனில் குறைந்தது 30% சார்ஜ் இருக்க வேண்டும். 4GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி இருக்க வேண்டும்.

4 படிநிலைகள்

  1. OxygenOS 13 open beta பேக்கேஜை ஒன் பிளஸ் நிறுவன பக்கத்தில் இருந்து டவுன்லோட் செய்து இன்டர்னல் ஸ்டோரேஜில் சேமிக்க வேண்டும்.
  2. ‘Developer Options’ செட்டிங்ஸ் மெனுவை ஆன் செய்ய வேண்டும். அதற்கு செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று About device கொடுத்து வெர்ஷன் பக்கத்திற்கு சென்று, நம்பரை ஏழு முறை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பின் மீண்டும் செட்டிங்ஸ் மெனுவிற்கு செல்ல வேண்டும். செட்டிங்ஸ் மெனுவில் About device சென்று பின் வலபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து ‘Local Install’மோடை ஆக்ஸிஸ் செய்ய வேண்டும்.

    அடுத்து, பைல் பிரவுசர் பயன்படுத்தி Step 1யில் டவுன்லோட் செய்த OxygenOS 13 open beta பைலை, கொண்டு வந்து திரையில் வரும் தகவலை பின்பற்றவும். பின், போனை அப்கிரேடு செய்யவும்.
  4. போன் அப்டேட் ஆனவுடன், ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டும். இப்போது நீங்கள் OxygenOS 13 open beta பயன்படுத்தலாம்.
Technology One Plus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment